402 38 இராமன் - பன்முக நோக்கில் குருகூர்ப் பெருமான் அருளிய ஆயிரக்கணக்கான பாடல்களில் திருமால் இராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்து நிகழ்த்திய அருளிச் செயல்களை விரிவாகப் பாடியுள்ளார். ஆனால், திருவாய் மொழியின் முதல் பத்தில் மேலே காட்டப்பெற்றுள்ள அடிகளை ஒன்றாக இணைத்துப் பார்த்தால், இத்தமிழர் கண்ட பரம்பொருள் தத்துவம் எத்தகையது என்பதை அறிய முடியும். ஆழ்வார் பெருமான் இத்தத்துவ விரிவுகளை அதிகம் பாடாததற்குக் காரணம் என்ன? சராசரி மனிதர்கள் இப்பாடல்களைப் படித்து அவற்றின் உட்பொருளை உணர்ந்து எளிதில் பயன்பெற முடியாது. எனவேதான், பரம்பொருள் அவதாரமாக இறங்கி வந்து, மக்களோடு மக்களாகப் பழகி அதன் செளலப்பியம் காரணமாக நிகழ்த்திய அருளிச் செயல்களைப் பாடுவதன் மூலம் எத்தரப்பு மக்களுக்கும் பயன்படும்படியான பாடல்களை அருளிச் செய்தனர். பரம்பொருளின் மானிட உருத் திருவிளையாடல்களைப் பாடியதால் அப் பரம்பொருள் யார் என்பதையும், அதன் உண்மை இலக்கணத்தையும் இவர்கள் மறக்கவில்லை. ஏறத்தாழ ஆறு முதல் எட்டு நூற்றாண்டு முடிய வாழ்ந்த ஆழ்வார் பெருமக்களைப் போலவே சைவ சமய நாயன்மார்களும் இம்முறையிலேயே பாடினர். எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் சமயப் பூசல் பெரிதாக வளர்ந்துவிட்டது. சைவ, வைணவப் போராட்டம் மிகுந்து விட்ட நிலையில் இரண்டையும் மடக்கிச் சங்கரரின் அத்வைதம் தமிழ்நாட்டில் வீசத் தொடங்கியது. அறிவுவாதம், தர்க்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சங்கரரின் அத்வைதக் கொள்கை இத்தமிழகத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த பக்தி இயக்கத்தை ஒரளவு அமிழ்த்தத் தொடங்கியது. பக்தி மார்க்கம் குறைந்ததால் சைவ, வைணவ சமயப் பூசல்கள் பரவலாயின. தமிழகம் தனது பழைமையான பக்தி மார்க்கத்தைக் கைவிட்டுச்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/423
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை