404 38 இராமன் - பன்முக நோக்கில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் முதலில் வருவது பால காண்டக் கடவுள் வாழ்த்து கம்பன் தன் கூற்றாகப் பரம்பொருள் பற்றிப் பேசியவைகளுள் முதற் பகுதி கடவுள் வாழ்த்துப் பாடல்களாகும். உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே” - கம்ப. 1 நூல் முழுவதற்கும் உரிய கடவுள் வாழ்த்தாகும் இது. சைவர், வைணவர் என்பது போக, எந்தச் சமயத்தினர் வேண்டுமானாலும் சிறிதும் தயங்காமல் தம்முடைய சமயக் கடவுள் வாழ்த்தாகவே இதனைக் கொள்ளலாம். உலகம் யாவையும் என்ற சொல்லால், நாம் காணும் இவ்வுலகை அன்றி அண்டம் முழுவதையும் குறிக்கிறான் கவிஞன். உளவாக்கல் என்ற சொல்லால் வேறொன்றாய்ச் சூக்கும வடிவில் இருந்த இப்பிரபஞ்சத்தைக் கண்ணால் காணக்கூடிய 'ருப்பொருள் வடிவுடைய பிரபஞ்சமாக மாற்றுதலை, தாம் உளவாக்கலும் என்ற தொடரால் குறிக்கிறான் கவிஞன். பின்னர், ஒர் ஊழிக்காலம் அப்பிரபஞ்சம் நிலைபெறுமாறு செய்தலும் பின்னர் அதன் வடிவத்தை மாற்றியும் வேறொன்றாக ஆக்கலும் ஆகிய முத்தொழில்களையும் விளையாட்டாக இச்சா மாத்திரத்தில் செய்கின்றவன் எவனோ அவனே தன் நிகரில்லாத் தலைவன் ஆவான். காட்சி அளவாக நாம் காணும் இப்பிரபஞ்சம் ஒரு காலத்தில் இல்லாமலிருந்து, இப்பொழுது இருந்து, நாளை வேறொன்றாக
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/425
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை