பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் ே 405 மாறப் போகிறது. ஜடப் பொருளாகிய இந்தப் பிரபஞ்சம் தானே இக்காரியங்களைச் செய்து கொள்ள முடியாது. எனவே, இச் செயல்களுக்கு ஒரு கர்த்தா இருந்து தீர வேண்டும். அந்தக் கர்த்தாவே தலைவன். அந்தத் தலைவனையே சரணமடைவது நம்முடைய கடமையாகும் என்கிறது இப்பாடல். எந்த ஒரு சமயத்தையும் குறிப்பிடாமல், அச்சமயம் அந்தத் தலைவனுக்கு இட்டுள்ள பெயரையும் குறிப்பிடாமல் அனைவருக்கும் பொதுவாக பரம்பொருளின் செயற்பாட்டை விளக்கிய பெருமை இப்பாடலுக்கு உண்டு. இனி அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்து "வான்நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும், ஊறும் உயிரும் உணர்பும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து, கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்." - கம்ப. 1313 பொதுவாகக் கடவுள் வாழ்த்துப் பாடிய கவிஞன் நாம ரூப மற்றதாகிய அந்த மூலப் பரம்பொருள் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகக் கீழே இறங்கி வந்து ஒரு தனிப்பட்ட வடிவோடு ஒரு பெயர் தாங்கி வந்துள்ளது என்பதால் உருவு, வடிவு எல்லை என்ற கட்டுப்பாட்டுள் அந்த மூலப் பொருள் வந்துவிட்டது என்று நினைய வேண்டா. ஒர் உருவம், ஒரு பெயர் என்பவற்றைத் தாங்கிய பொழுது ஒரு கூனியும், சிற்றன்னையும் செய்த சூழ்ச்சியால் அரசை விட்டுக் காடு சென்றும், அங்கேயும் வாளா இராமல் இமையோர் இடுக்கண் களைந்தான். இந்தப் பெயர் வடிவுடன் இக் காரியத்தைச் செய்தவன் யார் என்றால், மூலமாய் மேலே நிற்கின்றவனின்