406 38 இராமன் - பன்முக நோக்கில் ஒரு பகுதியாக இந்த மண்ணிடை இறங்கிவந்தாலும், இப் பஞ்ச பூதங்கள் அனைத்திலும் உள்ளும் புறமுமாய்ப் புலப்பட்டு அந்தந்த வடிவுடன் அமைந்துளான் என்க. உடல், உயிர், உணர்வு என்ற இம் மூன்றனுள் கண்ணுக்குத் தெரியும் பருப்பொருளாகிய இவ்வுடம்பினுள் உள்ளேயும் வெளியேயும் இயங்கும் உயிர் போலவும், உள்ளேயே இயங்கும் உணர்வு போலவும், அம் மூலப்பொருள் கலந்து, கரந்து, பரந்துள்ளது என்க. முதற்பாடலில் நாம ரூபமற்ற பரம்பொருளின் இலக்கணம் பேசிய கவிஞன், இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் அனைத்திலும் கலந்தும், கரந்தும் உள்ள பரம்பொருளின் மற்றோர் இயல்பைக் கூறினான். அந்த மூலப் பரம்பொருள் நம் மனோ, வாக்கு, காயங்கட்கு அப்பாற்பட்டு எங்கோ நிற்கிறது என்று நினைய வேண்டா, அது வடிவெடுத்துச் செய்த செயல்களை இதோ பார்! என்று பின்னிரண்டு அடிகளில் கூறுகிறான். அடுத்துள்ளது ஆரணிய காண்டக் கடவுள் வாழ்த்து பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா, ஒதி ஒதி உணரும் தொறும் உணர்ச்சி உதவும் வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா, ஆதிதேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ." - கம்ப. 2516 இப்பாடலின் பொருள் சற்றுச் சிக்கலானது. பேதி யாது என்றால், தான் தன் நிலையினின்று மாறுபடாமல் என்பது பொருளாகும். நிமிர் பேத உருவம் தான் மாறுபடாமல் இருந்தும், தன்னிடம் இருந்து தோன்றி மாறுபட்ட வடிவங்கள் எத்தனை தோன்றினும் தன் நிலையில் மாறுபடுதல் இல்லை. மாறுபடாத ஆதிதேவர் பலமுறை ஓதி உணர்ந்த நிலையில் நல்உணர்வை நல்குகின்ற தேவர் ஆவார். வேதமும், வேதியரும், நான்முகன் முதலானவர்களும் இன்னும் அறிந்துகொள்ள
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/427
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை