கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் 38 25 அதை முழுவதுமாகப் பின்பற்றவில்லை. தேவை ஏற்படும் பொழுது முரண்பட்டும் பாடுகிறான் என்பதை அறிவிப்பதற்காகவே கூற வேண்டியுள்ளது. இப்பிறப்பு நிகழ்ச்சியில் வான்மீகத்திலிருந்து இரண்டு மாறுதல்களைக் கம்பன் செய்கிறான். முதலாவது மாறுதல், பரம்பொருளை நான்கு கூறுகளாகப் பிரிக்காமல் ஆலிலைத் துயின்ற பரமன் இராமனாகவே அவதரித்தான் என்று கூறுவதாகும். முழு தற்பொருள் என்று இறைவனைக் குறிக்கும் தமிழர்கள், அம் முழுமுதலை நான்கு பாகங்களாகச் செய்ய ஒருநாளும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவேதான், கம்பன் வான்மீகியில் காணப்படும் நட்சத்திரங்களை ஏற்றுக் கொண்டாலும் கடவுளின் நான்கின் இரண்டு பாகம் இராமன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து ஒரு பிரச்சனை உருவாகிறது. வான்மீகியின் 18ஆவது சருக்கத்தில் 13ஆவது சுலோகத்தின்படி இலக்குவ சத்துருக்கனர் இருவரும் கடக லக்கினத்தில் ஆயில் யத்தில் பிறந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருவர் ஒரே நட்சத்திரம், ஒரே லக்கினத்தில் பிறந்தார்கள் என்றால், அந்த இருவரில் ஒருவர் பதினான்கு ஆண்டுகள் காட்டிலும், மற்றொருவர் நாட்டிலும் இருப்பது பொருந்தாததாகும். எனவே கம்பன், இலக்குவன் கடக ராசியில் பிறந்ததாகவும் (ஆயில்யம்) சத்துருக்கனன் சிம்ம ராசியில் (மகம்) பிறந்ததாகவும் கூறி முடிக்கின்றான் என்றால் எவ்வளவு துணுக்கமாக வான்மீகியைப் பயின்று அதில் தோன்றும் பிரச்சினைகளை நிறைவு செய்யும் முறையில் தேவையான மாறுதல்கள் செய்து பாடுகிறான் என்பதை அறிய முடிகிறது. இனி, பாலகாண்டத்தை அடியொற்றி நால்வர் பிறப்பு, நட்சத்திரம் முதலியவற்றைக் கம்பன் பாடினான் என்பதை முற்றிலுமாக மறுத்துத் தமிழர்கள் மிகத் தொன்மைக் காலத்திலேயே நட்சத்திரங்கள், கோள்கள் என்பவை பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சியும், சோதிட நூல் வன்மையும் பெற்றிருந்தனர். ஆதலால் நால்வர் பிறப்பு நட்சத்திரம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை