பரம்பொருளும் இராமனும் ேே 409 “மும்மூர்த்திகள் எனவும், முக்குணங்கள் எனவும், உலகிடையே காணப்படும் எல்லா வடிவங்களும் அம் மூலப் பொருளே இவை என்று சொல்லுதற்குப் பொருத்தமான வடிவங்கள் எனவும், இவ்வடிவங்களே அல்லாமல் அவற்றின் உள்ளே புகுந்துநின்ற உயிர்கள் எனவும், சான்றாண்மையே உருவாகக் கொண்டவர் உணர்வினுக்கு உணர்வானவன் எனவும் ஆயினான். மும்மூர்த்திகள், முக்குணங்கள் என்று கூறும்பொழுது ஒன்றுக்கொன்று முரண்பட்டுத் தனித்தனியே இயங்குபவை என்று கூறும் நிலை தோன்றியபொழுது அதை மறுத்துப் பேசுகிறான் கவிஞன். ஒவ்வொரு தொழிலைச் செய்யும்போது அதற்கேற்ற உருவம், இயல்பு, சொல் என்பவை மற்றொரு செயலைச் செய்யும்பொழுது மாறுபடுவதைக் காண்கின்றோம். ஒரே மனிதன் நீதிபதியாகப் பணி புரியும்பொழுது பிறருக்குத் தண்டனை விதிக்கும் ஆற்றலைப் பெறுகிறான். நீதிபதி அமரும் இடத்தை விட்டு இறங்கியதும் ஏனைய மனிதரால் மதிக்கப்பெறும் சிறப்பைப் பெறுகிறான். வீட்டிற்கு வந்தவுடன் இந்த நிலை அனைத்தும் மாறி, உடைகூட மாறிய நிலையில், தந்தையாகவும் கணவனாகவும் செயல்புரிகின்றான். அதே போன்று ஒரே பரம்பொருள் படைப்புத் தொழில் செய்யும்பொழுது நான்முகன் எனவும், காத்தல் தொழிலைச் செய்யும்பொழுது விஷ்ணு எனவும், அழித்தல் செயலைச் செய்யும் பொழுது ருத்திரன் எனவும் பெயர் பெறும். ஒரே பரம்பொருள் இம்மூவராகவும் அதிட்டித்து நின்று பணிபுரிகையில் மூன்று பெயர்களையும் மூன்று குணங்களையும் மேற்கொள்வதாகச் சான்றோர் அறிவர். ஒரே பரம்பொருள் இந்த மூன்று செயலையும் செய்கிறது என்பதைப் பிரகலாதன் கூற்றாகவும் (625) (6310), கவந்தன் கூற்றாகவும் (3682), பிற இடங்களிலும் கவிஞன் கூறுகிறான். இதே கருத்தைக் குருகூர்ச் சடகோபப் பெருமானும், தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலை (திருவாய்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/430
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை