410 36. இராமன் - பன்முக நோக்கில் மொழி 8 - 8 - 4 என்றும், உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளான் (திருவாய்மொழி 1 - 1 - 7) என்றும் கூறுவதைக் காணலாம். இந்த முத்தொழிலையும் செய்பவன் ஒருவனே என்பதைக் கவிஞர் பெருமான் உலகம் யாவையும்' என்ற முதற் பாடலிலேயே கூறுவதையும் அறிதல் வேண்டும். இனி வருவது கந்தரகாண்டக் கடவுள் வாழ்த்து "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎண், பூதம்ஐந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற விக்கம், கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - கை வில் ஏந்தி, இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!" - கம்ப. 4740 இப்பாடல் ஒரளவு சிக்கல் நிறைந்ததாகும். மாலை ஒன்று கீழே கிடக்கிறது. வெளிச்சம் குறைவான நிலையில் ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அது பாம்பு என நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைவு தவறு; அது பாம்பு அன்று; மாலைதான் ! என்று மனத்தில் தெளிவு உண்டாக வேண்டுமானால் இரண்டு செயல்கள் நிகழ வேண்டும். ஒன்று, மங்கலாக இருந்த ஒளி இன்னும் அதிகமாக வரவேண்டும். அன்றியும் காண்பவனுடைய பார்வையின் கோணமும் மாறவேண்டும். இவை இரண்டும் நடைபெற்றால் இது பாம்பன்று, மாலையே' என்ற தெளிவு ஏற்படும். இவை இரண்டும் இல்லாதபொழுது மாலையைப் பாம்பு என்று நினைக்கும் மனநிலை மாறவே மாறாது. அதேபோலத்தான் ஐம்பூதக் காட்சி. பஞ்ச பூதங்களும், ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ள வெவ்வேறானவை என்ற நினைவு நம்முள் இருக்கிறது. இந்த நினைவு நீங்கி, தனித்தனியே ஐந்தாகக் காணப்படினும் இவை அனைத்தும் ஒன்றுதான் என்ற தெளிவு நம்முள் வரவேண்டுமானால் இரண்டு செயல்கள்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/431
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை