பரம்பொருளும் இராமனும் ேே 4栉 தேவைப்படுகின்றன. ஒன்று, இறைவனுடைய கருணை மிகுந்த ஒளிபோல நம்முள் பரவ வேண்டும். நம்முடைய பார்வையின் கோணமும் மாறவேண்டும். இதுவரை நம்முடைய அறிவின் துணைகொண்டு, பொறி, புலன்களின் துணைகொண்டு பஞ்சபூதங்களையும் பார்த்து, அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, முரண்பட்டவை என்று கருதியிருந்தோம். இறைவனின் கருணை ஒளி நம்மேல் பட்டதும், நம் பார்வையின் கோணமும் மாறிவிடுகிறது. பூதங்களின் வேறுபாடுற்ற வீக்கம் கலங்கி மறைந்துவிடுகிறது. இதனைக் கூறிய கவிஞன், இந்த வேறுபாடு கலங்கி மறைவதற்குக் காரணம் இறைக்காட்சி என்று கூறுகிறான். எந்த இறை தரிசனம் ஏற்பட்டவுடன் இக்கலக்கம் தெளிகிறதோ, அந்த இறை யார் தெரியுமா? என்ற வினாவை எழுப்பி, வேத வரம்பாக உள்ள அப்பெருமான்தான் கை வில் ஏந்தி இலங்கை சென்று போரிட்டான் என்று முடிக்கின்றான் கவிஞன். மூலப் பரம்பொருளில் மூழ்கியவர்கட்குப் பஞ்ச பூதங்களும் அவற்றின் பயனாகிய பல்வேறு பொருள்களும் வெவ்வேறாகக் காட்சி அளிக்காமல், இவை அனைத்தும் இறைவடிவம் (பிரம்மசொரூபம்) என்ற தெளிவு உண்டாகிறது. அந்தத் தெளிவைத் தந்தவன்தான் வேத வரம்பினனாகிய பரம்பொருள். அவனே இராமனாக வந்தான் என்பதே இப்பாடலின் தெளிந்த பொருளாகும். இதனை அடுத்துள்ள யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் வருமாறு: 'ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; 'பல' என்று உரைக்கின், பலவே ஆம்; 'அன்றே என்னின், அன்றே ஆம்; ஆமே என்னின், ஆமே ஆம்: 'இன்றே என்னின், இன்றே ஆம்; 'உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/432
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை