414 38 இராமன் - பன்முக நோக்கில் - இந்த ஆறு பாடல்களிலும் பரம்பொருளின் இலக்கணத்தை அறிவுக்கூர்மையோடு ஆய்ந்து தெளிந்து கூறிய கவிஞன், அந்தப் பரம்பொருளே சிற்றன்னை காரணமாக வில்லெடுத்துக் காடும் மலையும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்தது என்று கூறி முடிக்கிறான். இந்த இடத்தில் திருமந்திரப் பாடல் ஒன்று நோக்கற்குரியது. மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம். திருமந்திரம் 2290 பூதங்கள் என்று நோக்கினால், பரம் அதனுள் மறைந்து விடுகிறது, பரம் என்று நோக்கினால், பூதங்கள் அதனுள் மறைந்துவிடுகின்றன. தசரத குமாரன் என்று நோக்கினால் மூலப் பொருள் அவனுள் மறைந்து விடுகிறது, மூலப்பொருள் என்று நோக்கினால், தசரதராமன் அதனுள் மறைந்து விடுகின்றான். பாத்திரங்கள் நோக்கில் இராமன் கவிஞன் நோக்கில் இராமனை எவ்வாறு பரம்பொருள் என்று காட்டுகிறான் என்பதை முன்னர்க் கண்டோம். இனி, சில பாத்திரங்களின் நோக்கில் இராமன் எவ்வாறு காட்சி அளிக்கிறான் என்பதைக் காண்டல் வேண்டும். இதில் சுக்கிரீவன், விராதன், இந்திரன், கருடன், கவந்தன், அனுமன் ஆகியோர் கருத்தில் இராமன் எவ்வாறு காட்சி அளிக்கிறான் என்பதைச் சுருங்கக் காணலாம். இங்குக் குறிப்பிட்ட பாத்திரங்களை அல்லாமல் பரதன், இலக்குவன், பிராட்டி ஆகிய மூவரும் இராமனைப் பரம்பொருளே என்று துணிந் திருந்தனர். இன்றேல், ஒரே ஒரு நாள் இளையவனாகப் பிறந்த பரதனும், இரண்டு நாட்கள் இளையவனாகப் பிறந்த இலக்குவனும் இராமனிடம் இத்துணை மரியாதை காட்டுவது பொருளற்றதாகிவிடும். எனவே, அவர்கள் பார்வையில் இராமன் எப்படிக் காட்சி அளித்தான் என்பதை அந்தந்தப்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/435
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை