பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் ே 415 பகுதிகளில் கண்டோம். ஆதலின், இங்கு மறுபடியும் அதனைத் திருப்பி உரைக்கத் தேவையில்லை. சுக்கிரீவன் சுக்கிரீவன் மனிதவர்கத்தினும் ஒரு படி தாழ்ந்துள்ள குரக்கு இனத்தைச் சேர்ந்தவன் வாலியைப் போன்று பெருந்தவமோ, பெருங்கல்வியோ, பேராற்றலோ பெறாதவன். அப்படி இருந்தும் முதன் முதலில் அவன் மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். மானுடவடிவில் வந்த இராகவன் மும்மூர்த்திகளையும் வென்றுவிட்டான் என்று பேசுகிறான். வைணவ மரபிலே சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயரால் மதிக்கப்படுகிற பேறு பெற்றவன், சுக்கிரீவன். ஆனால், அனுமனைப் போலவோ வீடணனைப் போலவோ எடுத்த எடுப்பிலேயே பக்திப் பார்வை வாய்க்கப் பெற்றவன் அல்லன், இந்த மகாராஜா. இராம இலக்குவரைத் தொலைவிலே கண்டபோது அச்சமும் ஐயமுமே அவனுள் எழுந்து மேலாதிக்கம் கொண்டன. என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல் (3763) என்று அனுமனைப் போலவோ, "அங்கம் மென்மயிர்சிலிர்ப்ப, கண்ணிர் வார, நெஞ்சு உருகிய (6498) வீடணன் போலவோ சுக்கிரீவனின் முதல் அனுபவம் அமையவில்லை. முதல் நிலையில் மேற்குறித்த இருவர்போல் அல்லன் ஆயினும் தொடர்நிலையிலும் முடிவிலும் இராமபிரானின் அடியவர் கூட்டத்தைச் சேர்ந்தவனாகவே மாறினான் என்பதை மனத்திற் கொண்டால் பின்வரும் பாடலில் புலப்படுத்தப்படும் சுக்கிரீவனின் முடிவு நிலை நன்கு விளங்கும். இராமன் மனிதனாகப் பிறந்ததால் சடாபாரத்தில் கங்கையைக் கொண்ட சிவன்,பிரமன் முதலாகிய தேவர்களின்