பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் 38 417 கம்பு 4065. "உண்டு எனும் தருமமே உருவமா உடையநிற் கண்டு கொண்டேன், . கம்ப 4066 இறைவனுக்குத் தருமஸ்வரூபி என்ற ஒரு பெயர் உண்டு ஆதலின், அதனையே தருமமே உருவமா உடைய நீ என்று பேசுகிறான். விராதன் விராதன் என்ற பெயருடன் வாழ்ந்த அரக்கன், இராமனால் கொல்லப்பட்டுக் கந்தர்வ வடிவுடன் மேலெழுந்து இங்குக் கூறும் கருத்துகள் ஆய்வுக்குரியன. பின்வரும் கருத்தைச் சொல்லும் போது விராதன் ஆகாயத்தி னின்று கீழே பார்க்கிறான். கீழே நிற்பவனின் கால்கள் தசரதராமனின் கால்களாக அவனுக்குத் தெரியவில்லை. எல்லா உலகங்களிலும் விரிந்து நிற்கின்ற இறைவன் திருவடியையே அவன் காண்கின்றான். அதனால் 'எங்கும் உன் திருவடியே நிறைந்திருப்பதால், இத் திருவடிகட்குரிய உன் சொரூபம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. (2563) "எல்லாவற்றையும் துறப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்ட முனிவர்கள்கூட மறுபடி பிறந்தால் உன்னை மறப்பரோ? அப்படி மறவாது இருந்தக்கால், மீட்டும் பிறவி அடைவார்களோ? இது இப்படி இருக்க, எந்தப் பிறப்பை வேண்டாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்களோ, அந்தப் பிறப்பையும் இறப்பையும் நீ விளையாட்டாக ஏற்றுக் கொள்ளுதல் உனக்கு உகந்ததோ! (256) (முனிவர் உள்பட 寅 竣 வாலி கண்ட பரம்பொருள் அனுபவம் மிக அரியது. அந்த அனுபவம் அவனுடைய ஆளுமைக்கு எவ்வாறு வாய்த்தது என்பது வேறொரு நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (காண்க: கம்பன் எடுத்த முத்துக்கள் பக். 139 - 165)