பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 36 இராமன் - பன்முக நோக்கில் முதலியவற்றைக் கம்பன்தான் முதலில் பாடி இருக்க வேண்டும். அதைப் பார்த்தே வான்மீகி பாலகாண்டத்தில் இடைச் செருகல்களாக இவை நுழைக்கப்பெற்றன என்றும் கூறுவர். திருமாலா, கடந்த பொருளா? இன்றுள்ள முறையில் பலரும் நம்புகிறபடி பாலகாண்டமும் வான்மீகி இயற்றியதுதான் என்று கொண்டால், இராமபிரான் விஷ்ணுவின் அவதாரம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனாலும், அம்சாவதாரம் என்ற கருத்து ஏற்புடையதாயில்லை. இந்த அளவில் வான்மீகியைப் பின்பற்றிய கம்பன், இராமபிரான் பிறந்தான் என்று சொல்லுகின்றபோது ஆலிலைத் துயின்ற அண்ணலே இராமனாக அவதரித்தான் என்று பேசுகிறான். ஆனால், இதே கம்பநாடான் இதே திரு அவதாரப் படலத்தின் கடைசிப் பாட்டில் இராமனை மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் - அதாவது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருக்கும் முற்பட்டவன் - என்பதை முப்பரம் பொருளுக்கு முதல்வன் (கம்பன் 313) என்று பேசுவது வியப்பை அளிக்கிறது: இப்பரிசு, அணிநகர் உறையும் யாவரும் மெய்ப்புகழ் புனைதர, இளைய வீரர்கள் தப்பு அற அடிநிழல் தழுவி ஏத்துற, முப்பரம் பொருளுக்கு முதல்வன் வைகுறும். - கம்ப. 313 ஒரே திரு அவதாரப் படலத்தில் கோசலை வயிற்றில் பிறந்தவனை ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்தவன்' (282) என்று திருமாலே பிறந்தான் என்ற பொருளில் 282ஆம் பாடலில் கூறிவிட்டு, அதே படலத்தின் 313ஆம் பாடலில் மும்பரம் பொருளுக்கும் முதல்வன் என்று அதே இராமனைக் குறிப்பது எப்படிப் பொருந்தும்? எவ்வளவுதான் வான்மீகியைப் பின்பற்றிப் பாடினான் என்று கொண்டாலும் கம்பநாடன் தனக்கென்று ஒரு