பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 38 இராமன் - பன்முக நோக்கில் அவற்றோடு அறிவு, உணர்வு, உடம்பு ஆகியவற்றையும் படைத்துச் சர்வ சங்கார காலத்தில் மறுபடியும் இவை அனைத்தையும் அழித்து, தான் ஒன்றாகவே இருந்து, மீட்டும் படைப்புத் தொழிலைத் தொடங்கும் காலத்தும் எவ்வித மாறுபாடும் இன்றி இருக்கும் செம்மையான ஞானத்தின் கொழுந்தே! நீ நல்லவர்களைக் காக்கின்றாய். அல்லவர்களை அழிக்கின்றாய். அந்த அல்லவர்கள் அழிவதற்குரிய அவர்கள் செய்த பாவங்களும் நீ படைத்தவைதாமே! (2616) இவ்வாறு புகழ்ந்த இந்திரன், தன்னுடைய இந்திர நிலையிலும் உணர்ந்துகொள்ள முடியாத முரண்களிடையே முழு முதலைக் காண்கிறான். இதுபற்றிச் சிறிது விரிவாகக் காண்பது நலம் பயக்கும். முரணில் முழுமுதல் ஆதி மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே அவனைச் சுற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினான். கறுப்பு, வெள்ளை என்ற முரண்பாட்டிலிருந்து உலகம் முழுவதும் முரண்களால் நிறைந்திருக்கக் கண்டான். ஒன்றுக்கொன்று நேர்மாறாக அமைந்திருக்கும் இவ்வுலகின் உட்பொருள் யாது என அவன் நினைக்கத் தொடங்கினான். அன்பே வடிவான பகமாட்டைக் காட்டிலே கண்டான், ஆதி மனிதன். ஆனால், அதே காட்டில் கொடுமையே வடிவான புலியும் வாழ்வதைக் கண்டான். தத்தம் வாழ்வை நடத்திச் செல்லுகின்ற முறையில் அவை அவை சிறந்தவைதாம். எதனை உயர்ந்தது என்று கூறுவது? எதனைத் தாழ்ந்தது என்று கூறுவது? வெய்யிலில் கிடந்து அவதியுற்றான் ஆதி மனிதன். ஆனால் அதன் மறுதலையான குளிர் வந்தபொழுதும் துன்புற்றான். பல முறை வெய்யில் சிறந்ததா குளிர் சிறந்ததா என்ற வினாவை அவனே எழுப்பியிருத்தலுங்கூடும். இரண்டிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்பதை