424 38 இராமன் - பன்முக நோக்கில் யார் உண்டாக்கினார்கள் என்ற வினா எழுந்தது. நன்மையை யார் படைத்தார்களோ அவர்களே தீமையையும் படைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் மனிதனுடைய ஆராய்ச்சி கொண்டு செலுத்தியது. இன்னும் அதுபற்றிச் சிந்திக்கும்பொழுது படைப்பின் சிறப்பே அதுதான் என்றுகூட நினைக்க வேண்டி வந்தது. அப்படியானால், படைத்தவன் இயல்பு யாது என்ற வினாத் தோன்றிற்று. முரண்பாட்டைப் படைத்துவிட்ட அவனும் முரண்பாடுடை யவன்தானா? ஆம் ஆழ்ந்து ஆராயாமல் மேலாக நின்று நோக்கும்பொழுது படைத்தவனிடமும் முரண்பாட்டைக் காணலாம். மேலாகக் காணும்பொழுது தோன்றும் முரண்பாட்டை முழுமுதலிடமுங் கூடக் காண்கிறவர் காட்சியைக் கம்பநாடன் இதோ கூறுகிறான்: தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே கம்ப. 2613 என்றும், மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருளில்லை; மேல் கீழும் இல்லை; மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல்இடையோடு ஈறு இல்லை; முன்னோடு பின் இல்லை; தேவாஇங்கு இவ்வோ நின்தொன்று நிலை என்றால் - கம்ப. 2614 என்றும் கூறுகிறான். தோய்ந்தும் என்று தொடங்கும் அடியின் கருத்து யாது? பொருள் அனைத்திலும் கலந்தும் கலவாமலும் இருக்கும் ஒளியே என்பதுதான் இதன் பொருள். ஒன்று? ஒரு பொருள் மற்றதில் கலந்து நிற்கலாம்; அன்றேல், கலவாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் ஒரு பொருள் மற்றொன்றில் கலந்தும் கலவாமலும் எவ்வாறு இருக்க முடியும்? மேவாதவர் இல்லை; மேவினவரும் இல்லை என்ற அடியில் இத்தகைய ஒரு நிலையைத்தான் கவிஞன் பேசுகிறான். முதல், இடை,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/445
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை