பரம்பொருளும் இராமனும் ேே 425 ஈறு இல்லை என்று கூறுவதால் ஆதியும், அந்தமும் அற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறான். மேவாதவர் பகைவர், மேவினவர் நண்பர் என்ற இரண்டும் முரண்பட்ட நிலைகள். இவை இரண்டும் இல்லையாம் இறைவனுக்கு. மூவாத நிலை - இளமை, மூத்தமை - முதுமை நிலை. இவ்விரு முரண்களிலும் படாதவன் இறைவன். இவ்விதம் முரண்பட்டவற்றுள் ஒற்றுமையாய் இலங்குபவனே இறைவன். ஆழ்ந்து ஆராயாமல் மேலாகப் பார்ப்பவருக்குப் பொருள்களிடம் முரண்பாடு தோன்றுவதுபோல், முழுமுதலிடத்தும் முரண்பாடு தோன்றத்தான் செய்கிறது. எனவே, இம் முரணைக் கடந்து முழுமுதற் பொருளை அறிய மாட்டாதார் அப்பொருளையும் முரண் உடையதாகவே கருதிவிட்டனர். இந்த அடிப்படையில் ஆய்ந்தால் ஒளி என்ற பொருளையும் இருள் என்ற பொருளையும் தனி இயல்புடையனவாகக் காணும் காட்சியில்தான் தவறு உண்டாகிறது என்பது தெரியவரும். மேல் என்ற இயல்பும், கீழ் என்ற இயல்பும் தனித்தன்மையுடையன என்று கருதுவதில்தான் பிழை நேர்கிறது. இவற்றுள் எது உண்மை : இனி, இதே கருத்தை வளர்த்துச் செல்கிறான் கவிச்சக்கரவர்த்தி, வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்துள்ளன இறைவனின் திருவடிகள். ஆனால் ஒன்றனோடு ஒன்று முரண்பட்டு நிற்கும் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்றவற்றில் உறைந்தால் அப்பொருள்கள் எவ்வாறு அத்திருவடியைப் பொறுத்துக் கொண்டுள்ளன: (2563) என்று பேசுகிறான் கவிஞன். முரண் கடந்து நிற்கும் முழுமுதலைப் பற்றி எளிய மானிடன் சிந்திக்கத் தொடங்கினால் என்ன அறிய முடியும்? உலகின் முரண்பாடுகளில் சிக்கி அவற்றிலிருந்து மீண்டு வரமுடியாமல் தத்தளிக்கும் மனிதன், முரண்பட்ட பொருள்களில் முரண்பாட்டைத் தவிர ஒருமைப்பாட்டை அறியமுடியாத சிற்றறிவு படைத்த மனிதன் என்ன செய்ய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/446
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை