426 38 இராமன் - பன்முக நோக்கில் முடியும்? முரண்பாட்டினிடையே நின்று முரணில்லாத முழு முதலைக் காண்பவன் அதன் தன்மையை அறியமுடியாமல் அதுவும் ஒரு மாயையோ என நினைக்கிறான். ஆனால், ஒரு சிலர் இந்நிலையைக் கடந்து சென்று முரணின் இடையே முரண்பாடற்ற தன்மையை, அதாவது, ஒருமைப்பாட்டைக் காண்கின்றனர். அவ்வாறு ஒருமைப்பாட்டைக் காணக்கூடிய அவர்களுக்குக்கூட வியப்புத் தோன்றத்தான் செய்கிறது. இந்த இரண்டு மனநிலைகளையும் கவிஞன் மாயை இது என்கொலோ? "வாராதே வரவல்லாய்” (2570) என்று பாடுகிறான். வாராமலே வருதல் என்பது ஒரு முரண்பாடுதான்; ஆனால் முரண் இல்லாத முழுமுதல் இதனைச் செய்கிறான். எனவே, மாயை இது என் கொலோ’ என்று மனிதன் வியக்கிறான். ஒரளவு சிந்தனையைச் செலுத்தினால் வாராதே வருதலிலும் முரண்பாடு ஒன்றும் இல்லை என்பது விளங்கும். இதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். மனிதன் காணும் முரண்பாட்டிற்குப் பெருங் காரணமாய் அமைவது அவன் பேசும் மொழியேயாம். ஒருவன் மனத்தே தோன்றும் கருத்தைப் பிறர் செம்மையாக அறிய உதவுவதும் மொழியே. அப்பிறரைத் தவறாக அறியச் செய்வதும் மொழியே. வருதல் என்ற சொல்லைச் சற்றுக் காண்போம். இதனை இலக்கண நூலார் தல்' என்ற விகுதி பெற்ற தொழிற்பெயர் என்பர். இச்சொல் எதனைக் குறிக்கிறது; ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லும் நிலையை அறிவிப்பதாகும் இச்சொற்பொருள். நாம் கானும் பொருள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்து வருமாயின் அப்பொருள் 'வருகிறது என்று கூறுகிறோம். வருதலாகிய இத்தொழிலை அப்பொருள் செய்வதனால் தோன்றும் பயன் யாது? தூரத்தே இருந்த பொருள் நம் அணித்தே வந்ததுதான் பெறும் பயனாகும். இதனையல்லாமல் வேறு பயன் உண்டோ? உண்டு. அப்பொருளை நாம் தொடவும் அனுபவிக்கவும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/447
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை