பரம்பொருளும் இராமனும் 38 427 முடியும். ஆனால், வந்த பொருள் பருப்பொருளாக இல்லாமல் நுண்பொருளாக இருக்குமாயின் தொடுதல் முதலிய புலன்களின் மூலம் பெறும் அனுபவம் இல்லை என்றாகிவிடும். ஆனாலும், மனத்தளவில் அப்பொருள் ஒரு நிறைவைத் தருகிறது. எனவே, நாம் விரும்பும் பொருள் நம்மிடையே வந்துவிட்டது என்பதன் கருத்து அல்லது பயன் யாது? அப்பொருளால் நாம் பெறக்கூடிய பயனை (மனநிறைவை) அடைந்துவிட்டால் பொருளே வந்ததாகத்தானே கருத்து. முழுமுதற் பொருளை ஒருவன் அடைந்துவிட்டால் அதனால் அவன் பெறும் பயன் யாது? மனநிறைவு; ஈடு இணையற்ற மனநிறைவு. இம் மனநிறைவை ஒருவன் பெற்றுவிட்டான் என்றால், அதன் கருத்து யாது? அவன் முழுமுதற் பொருளின் தொடர்பைப் பெற்றுவிட்டான் என்பதேயன்றோ? அப்பொருள் எவ்வாறு வந்தது? எவ்வடிவில் வந்தது? எவ்வழியில் வந்தது? போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு அவன் அவதியுறுவதில்லை. அப்பொருள் வருமா என்று பல காலம் ஏங்கிக் கொண்டிருந்தான். இரவு பகல் இதுவே நினைவாய் வாழ்வில் வேறு குறிக்கோளின்றி அலைந்தான். திடீரென்று ஒருநாள் அவனுள் அந்த அமைதி வந்து புகுந்துகொண்டது. ஆம் ! அப்பொருள் தன்னுள் புகுந்தாலொழிய இவ்வகை அமைதி கிடைக்காதாகலான், அவன் பொருளின் வருகையை உணர்ந்து கொண்டான். ஆனால், வந்ததை அவன் காணவில்லை; காணவும் இயலாது. எனவே, வாராதே வர வல்லாய்' என்று பாடுகிறான் கவிஞன். பொருள் வந்துவிட்டதுபோல் உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் பேரமைதி என்று கூறினோம். ஆனால் இவ்வுலக நியாயங்கட்குக் கட்டுப்பட்டு இவ்வமைதி நிலைபெறாமல் போவதும் வருவதுமாக இருந்தது. கிடைத்த பேரமைதி ஓரளவு நீங்கியவுடன் ஏற்பட்ட கலக்கத்தில், முன்னர்க் கிடைத்த பேரமைதிதானும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/448
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை