பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் 38 429 சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கோவைக்கு நாம் வருவதும் கோவை நம்மிடம் வருவதும் பயனளவில் ஒன்றேயாயினும் சொல்லளவில் வேறு வேறுதான். அன்றியும் வருதலாகிய வினையைச் செய்யும் வினைமுதல் நாமாக இருக்கிறோம். அவ்வினையைச் செய்யும் வாய்ப்பு கோயம்புத்துர் என்ற அஃறினைப் பொருளுக்கு இல்லை. எனினும், இவ்வினாவில் தவறு காண்பார் ஒருவரும் இல்லை; இவை முரண்பாடுடையன எனக் கூறுவார் ஒருவருமில்லை. 'வாராதே வரவல்லாய் என்று கவிஞன் கூறும்பொழுது ஏனைய உயிர்கள் போன்று வருதலாகிய வினையைச் செய்துவந்ததால் ஏற்படும் பயனைத் தருபவனல்லன் முழுமுதலாகிய ஒருவன் என்பதையும் கவிஞன் குறிக்கிறான். ஏனையோர் வருதலாகிய வினையைச் செய்தாலொழிய வந்த பயனைத் தரவியலாது. ஆனால், இறைவன் வினை செய்யாமலே வினையின் பயனைத் தருகிறான் என்ற உயர்ந்த கருத்தும் இதில் அடங்கி நிற்கின்றது. இதனையே மாணிக்கவாசகர் “விச்சது (விதை இன்றியே விளைவு செய்குவாய்" என்கிறார். முரண்பாட்டில் முழுமுதலைக் கண்ட தமிழன் வாழ்க. இராமனை இந்திரன் கண்டபோது பெற்ற அனுபவ உணர்வு வாயிலாக இறைத் தத்துவத்தின் ஒரு பேருண்மையைக் கவிச்சக்கரவர்த்தி விளக்கியுள்ளான். கவந்தன் இனி, இராமனே பரம்பொருள் என்பதைக் கவந்தன் கூற்றைக் கொண்டு ஓரளவு காணலாம். இவனும் அரக்கனாய் இருந்து இராகவனால் சாபம் தீர்க்கப் பெற்று, பழைய கந்தர்வவடிவுடன் இராமனைப் பார்த்தவனே. இராமன் பற்றிக் கவந்தன் பேசுவதில் விராதன் முதலியோர் கூற்றில் கண்ட கருத்துகளே பேசப்படுகின்றன. இவற்றில் பல விராதன், இந்திரன் முதலானோரால் முன்னரே சொல்லப் பட்டிருப்பினும், கவிஞன் அதை மீட்டும் கூறுவது இராமன்