பரம்பொருளும் இராமனும் ேே - 431 அறநெறியை நீ கடைப்பிடிக்கின்றாயா?" (3689) தசரதராமனாகத் தோன்றியவனே கவந்தனின் சாபத்துயரை ஒழித்தவன். அவன் மூல இராமனாகிய பரம்பொருளே என்பதைக் கவந்தன் உணர்ந்தான். கவந்தனாக இருந்தவன் கந்தர்வனாக விண்ணில் உயர்ந்தபோதுதான் மூலஇராமன் இவன் என்பதை உணர்ந்தான். அந்த அனுபவத்தை இராமபிரான் அருளிய தீட்சையால் கவந்தன் பெற்றான். கவந்தப் பூதம் கண்டது தசரத ராமனை, இராமன் தீட்சையால் சாபம் நீங்கப்பெற்று உயர்ந்தபோது அவன் கண்டது தசரதராமனின் உள்ளே ஒளி(ர்)ந்த மூல இராமனே. இந்தக் கருத்துகளைக் கவிச்சக்கரவர்த்தி, ஆளும் நாயகன் அம்கையில் தீண்டிய அதனால் மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடிந்தான்; தோளும் வாங்கிய தோம்உடை யாக்கையைத் துறவா, நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான். - கம்ப. 3680 விண்ணின் நின்றவன், விரிஞ்சனே முதலினர் யார்க்கும் கண்ணில் நின்றவன் இவன் எனக் கருத்துறு உணர்ந்தான் - கம்ப. 3681 என்று பாடியிருப்பதைக் காணலாம். மானிடச் சட்டையையும் கடந்து மூல இராமனைக் காணும் பேறு அரக்கர்க்கும் பூதங்கட்கும்கூட வாய்க்கும் என்ற சமயப் பேருண்மையைக் கவிஞன் விளக்கும் இடம் இது. கவந்தன் துதியாக அமையும் பாடல்களில் புதிதாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து, பரம்பொருளின் செயல்கள் பற்றியதாகும். அறநெறிகள் கூறும் வேதங்கள் அவன் நினைந்தவற்றையே கூறுகின்றன என்று விராதன் கூறுவது
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/452
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை