432 ேே. இராமன் - பன்முக நோக்கில் சிந்தனைக்குரியது. மாதலி இறுதிநாள் போரில் இராவணனுடன் போர் செய்ய இராமனுக்கு ஒரு தேர் வேண்டியிருந்தது. விண்மிசை படரும் சக்தி வாய்ந்த தேர் ஒன்றைத் தேவர்கள் மாதலி என்ற சாரதியுடன் மண்மிசை அனுப்பினர். மாதலி தேரைச் செலுத்த, இராகவன் அதில் ஏறிப் போர் புரியலானான். இராவணன் பயன்படுத்திய மாயா அஸ்திரம் இராமனையும் ஒரு கணம் சிந்தனை இழக்கச் செய்தது. அந்த நிலையில் மாதலி ஒரு பேருண்மையை வெளியிடுகிறான். 'இறைவனுக்கு எத்துணை அளப்பரிய ஆற்றல் உண்டோ அதைவிட அதிகமான ஆற்றல் அவனுடைய நாமத்திற்கு உண்டு. உதாரணம் தேடிச் செல்லவேண்டிய தேவை இல்லை. வருணனை வழிவேண்டி அணை கட்டித்தான் இராம, இலக்குவர்கள்கூட இலங்கையை அடைய முடிந்தது. ஆனால், 'இராமா' என்ற மந்திரத்தைச் சொல்வதன் மூலமே காலினில் கருங்கடல் கடந்தான் அனுமன் என்பதால், "நின்னிற் சிறந்தவை நின்நாமங்கள்” என்ற முதுமொழி அனுமன் விஷயத்தில் உண்மையானதைக் கண்டோம். இப்பொழுது இராவணனுடைய மாயாஸ்திரத்தால் மனம் மறுகிய இராமனுக்கே மாதலி ஒர் உண்மையை எடுத்துக் கூறுகின்றான். அரக்கனால் ஏவப்பட்ட மாயாஸ்திரத்தால் இராமனும் மயங்கினான் போலும்! பகைவன் மாயாஸ்திரம் ஏவினால், அதன் வலிமையை அழிக்க ஞானாஸ்திரத்தை ஏவுதல் வேண்டும் என்பதை எவரும் சொல்லவேண்டியதில்லை. 'வான்மீகத்தில் இதுபோன்ற சட்டம் அமைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மாயைத் திறம் அழிக்கும் ஞானம், இவை நாமப் பெருமை, மூல ராமன் - தசரத தராமன் என்ற கமுத் தோட்டங்கள் கம்பனில் புலமை படைத்த செய்திகள்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/453
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை