பரம்பொருளும் இராமனும் 38 433 ஆனால், அதனை ஏவுமாறு இராமனுக்கு மாதலி சொல்லுவதாகக் கதைப் போக்கு அமைக்கப்பட்டுள்ளது. காரணம், தசரத ராமனாகிய மானிடன் மாயாஸ்திரத்தினால் கலங்கியதாகவே இருக்க வேண்டும். மாயைப் படையால் விளைந்த விளைவுகள் சொல்லுந் தரத்தன அல்ல. மாய்ந்தொழிந்த அரக்க ரெலாம் உயிர்பெற்றெழுந்து ஆரவாரிக்கின்றனர். மாயையின் திறம் இது கவிச்சக்கரவர்த்தி பல பாடல்களில் (9813.982) மாயைப் படையின் விளைவுகளைப் பாடுகிறான். இராமனே வினையம் மற்று இது என்ன மாயமோ? விதியது விளைவோ? என்றெல்லாம் மறுகுகிறான். (9822). ஞானப் படையை ஏவினால் மாயைப் படையின் விளைவுகள் அழியும் என்பதை எளிதில் உணரமுடியாத அளவுக்கு இராமபிரான் மயங்கி, ஈது என்ன? சொல் என மாதலியைக் கேட்கிறான் மனிதப் பிறப்பின் மயக்கம் இது. மாயை ஞானம் இவற்றின் திறத்தை மட்டும் சொல்வதற்காகக் கம்பன் இந்தக் கட்டத்தைப் பாடவில்லை. இராம நாமத்தின் பெருமையை நினைவூட்டுவதற்கு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்துகிறான். இராவணன் இராமனை நோக்கி மாயாஸ்திரத்தை ஏவியது கொல்லனுக்கு ஊசி கொடுத்தது போன்றது என்று உவமை கூறிய மாதலி, மேலே சொன்ன செய்தியே இங்கே கவனிக்கத்தக்கது. "பிறவி நோய்க்கும் அந்த நோயினைத் தருகின்ற வினைக்கும் மருந்தாக விளங்குவது நின் திருநாமம். அந்த நாமத்தைச் சொல்வோரின் பிறவிப் பிணி, பாம்பின் நஞ்சு இறங்குவதுபோல் நீங்கிவிடும். பாம்பின் விடத்தை இறக்கும் மந்திரத்தின் வலிமை போலப் பிறவியையும் பிறவிக்குக் காரணமான வினையையும் நீக்கும் வலிமையுடையது உன் நாமம்." (9824) இவ்வாறு இராமனுக்கே இராமநாமத்தின் பெருமையை நினைவுறுத்தி ஞானப் படையை ஏவுமாறு மாதலி கூறினான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/454
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை