434 38 இராமன் - பன்முக நோக்கில் "விக்கு வாயிலில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஒர் வலியின், நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின்பெரும் பெயர் நெடியோன், நீக்குவாய்! - நினை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும்." (9824) இறைவனின் நாமத்தின் பெருமையை முன்னர் அனுமன் மூலம் வெளிப்படுத்திய கவிச்சக்கரவர்த்தி, காப்பியம் முடியப் போகும் தறுவாயில் அதனை மறுபடியும் நமக்கு நினைவூட்டுவதற்காக மாதலியைக் கொண்டு திருநாமச் சிறப்பைப் பேசவைக்கிறான். கவிச்சக்கரவர்த்தியின் சாதனை விராதனில் தொடங்கி, மாதலி பேசுகின்றவரை எத்தனை பாத்திரங்கள் இராமனின் எதிரிலேயே அவனைத் துதிக்கத் தொடங்கி, அவன் பரம்பொருள் என்பதைத் தர்க்க முறையிலும், பக்தி முறையிலும் பேசுகிறார்கள். அப்படி இருந்தும், இந்தப் புகழ் மொழிகளோ, பக்தி மொழிகளோ தசரத ராமனிடம் எந்த விதமான சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரே நேரத்தில் ஒருவனை மனிதனாகவும், கடவுளாகவும் படைப்பது மிக அரியகாரியம் என்றும் அப்படிப் படைத்தவர்கள் அதில் வெற்றி அடையவில்லை என்றும் தொடக்கத்தில் கூறியிருந்தோம். ஏனைய கவிஞர்கள் யாரும் வெற்றிபெறாத இந்தச் சோதனையைக் கவிஞன் மேற் கொள்ளுகிறான். அதில் முழு வெற்றியும் அடைகிறான் என்பதை நினைக்கும் பொழுது, நாம் வியப்பில் மூழ்கிவிடுகிறோம். இராமனிடம் காணப்பட்ட கடவுள் தன்மையை அறவே ஒதுக்கிவிட்டு, வெறும் மனிதனாக - தசரத குமாரனாக - அவனை வைத்துக்கொண்டு பார்த்தால், அதிலும் இராமன் ஈடு இணையற்று விளங்குகிறான். நடையில் நின்றுயிர் நாயகன் என்றும், 'அறத்தின் அழியான் என்றும் கவிஞன் போற்றுவதற்கு ஏற்ப இராமனுடைய வாழ்க்கை அப்பழுக்கற்றதாய் ஒரு மாமனிதனுடைய வாழ்க்கையாய்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/455
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை