பரம்பொருளும் இராமனும் ேே 435 நடைபெற்றதைக் காண்கிறோம். மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி, இலக்குவன் எவ்வளவு தடுத்தும், மாயமான் பின்னே சென்றது, ஒரு கணவன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இராகவன் ஒரு மனிதனைப் போல நடந்து கொள்கின்ற இடமாகும். 'இராவணன் சீதையைத் துக்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்த உலகத்தையே அழிக்கிறேன் பார் என்று சடாயு எதிரே பேசும் பொழுது மனித இராமன் முற்பட்டு நிற்கின்றான். சடாயு, உன் பிழை என்று எடுத்துக் காட்டிய பின், காரணமின்றி உலகின்மேல் கோபம் கொண்டது தன்னுடைய தவறு என்று தன் பிழையை நினைக்கும் பொழுது இராமன் மாமனிதனாகக் காட்சி அளிக்கிறான். பிராட்டியைப் பிரிந்து பெருவருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது அவன் ஒரு மனிதன் என்பதை நினைவூட்டுகிறான். இலக்குவன் ஆறுதல் கூற அமைதி அடைகின்ற இராமன், பண்புள்ள ஒரு மனிதனையே நினைவூட்டுகிறான். உணர்ச்சி வசப்பட்டு 'என்னைக் கெடுத்தனை வீடணா!' என்று குமுறுகையில் சாதாரண மனிதனாகக் காட்சி அளிக்கிறான். தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து, இது வீடணன் தந்த வென்றி என்று கூறும்பொழுது மாமனிதனாகக் காட்சி அளிக்கின்றான். வாலியைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ளாமல், சுக்கிரீவனிடம் கொண்ட அந்தப் பாசத்தினால் வாலியைக் கொல்கையில் சாதாரண மனிதனாகக் காட்சி அளிக்கின்றான். அது சரியில்லை' என்றுணர்ந்து, வாலியின் மைந்தனிடம் அரசனின் அடையாளமான குறுவாளைத் தந்து நீ இது பொறுத்தி என்று சொல்கையில் மாமனிதனாகக் காட்சி அளிக்கிறான். சுக்கிரீவன் குடிபோதையில் நன்றி கொன்றான் என்று நினைத்துச் சினம் கொண்டு, வாலியைக் கொன்ற அம்பு இன்றும் இருக்கிறது என்று சொல்லி வா என்று இலக்குவனை அனுப்பும்பொழுது மனிதனாகக் காட்சி அளிக்கிறான். தன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/456
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை