436 38 இராமன் - பன்முக நோக்கில் பிழை உணர்ந்து சுக்கிரீவன் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டவுடன் அவனை எடுத்து மார்புறத் தழுவிக்கொண்டு, 'நீ பரதன் போன்றவன் அல்லவா? உன்மேல் எப்படி கோபம் வரும் என்று சொல்லும்பொழுது மாமனிதனாகக் காட்சி அளிக்கிறான். முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து நின்ற இராவணனை நோக்கி, இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்று கூறுகையில் மாமனிதனாகக் காட்சி அளிக்கிறான். மேலே கூறிய பகுதிகள் அனைத்திலும் இராமன் கடவுள் தன்மையைக் காட்டாமல் மாமனிதத் தன்மையையே காட்டிடும் கவிஞன், உலக இலக்கியத்தில் ஈடு இணையற்ற படைப்பையே நல்குகிறான். இதைவிடச் சிறப்பான ஒன்றையும் கவிஞன் செய்துகாட்டுகிறான். சாதாரண மனிதனாக இல்லை, மாமனிதனாக வாழ்ந்துவரும் ஒருவன்கூட விராதன் முதல் மாதலி வரை உள்ளவர்கள் முன் நின்றுகொண்டு நேராகவே நீ பரம்பொருள்' என்று பேசுவதைக் கேட்டால் தன்னையும் அறியாமல் நாம் அப்படித்தானோ என்ற நினைவு ஒரு வினாடியேனும் வாராமல் போகாது. அப்படி வந்தாலும், அடுத்த வினாடியே அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். எனவே, அதனைப் பெருந்தவறு என்று கூறுவதற்கில்லை. அப்படி இருந்தும் இத்தனைபேர் பரம்பொருளாகக் கொண்டு புகழும் பொழுது தனக்குப் பழக்கம் இல்லாத யாரோ ஒருவனைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்ற முறையில் இராகவனும் நடந்துகொள்ளுமாறு செய்தது கம்பன் ஒருவனுக்கே இயன்ற காரியம் ஆகும். இராமன் பரம்பொருள் - அனுமன் விளக்கம் 'பரம்பொருள் என்றால் யார்? அவன் இராமனே என்று ஐயம் திரிபிற்கு இடமின்றி விளக்கி நிரூபித்தவன் அனுமனே ஆவான். இதனை நிரூபிப்பதற்கு வேண்டிய அனைத்துப் பண்புகளிலும் ஒன்றுகூடக் குறையாமல் நிறைந்து நின்ற அனுமனை - இதைச் செய்வதற்குத் தகுதியானவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/457
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை