பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் 38 437 என்று நினைத்த கம்பநாடன், "இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகனாகிய அனுமனை இதற்குப் பயன்படுத்துகிறான். முதன் முதலில் இராகவனைக் கண்டபொழுது அவன் 'விஷ்ணுவே என்று நினைத்தான் அனுமன். சங்கு, சக்கரக் குறியுள என்பது ஒரு சான்று. 'யாரைக் கண்டால் தன்னுடைய உள்ளமும், எலும்பும், உடலும் உருகுகின்றதோ அவனே திருமால், என்று அனுமனின் தந்தை கூறியது இரண்டாவது சான்று. இராமன், திருமாலே என்று நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பங்கு ஏற்றுக் கொண்ட அனுமன், புருவுகார பூதையாகிய பிராட்டியைக் காணாமையால் அந்த ஒரு பங்கு ஐயத்தை மனத்துட் கொண்டிருந்தான். அசோகவனத்தில் மரத்தின்மேலிருந்து பிராட்டியைப் பார்த்தவுடன் இவள் கமலச் செல்வியே அதனால் அவன் கமலச் செல்வனே என்ற முடிவுக்கு வந்தான். அதன் பிறகு இராவணனிடம் பேசும் பொழுது இராமன், விஷ்ணு என்ற கொள்கையை விட்டு விட்டு அவன் மூலப் பரம்பொருளே என்று பேசுகிறான். தன் எதிரே இருந்த அனுமனை, "நீ யார்? மும்மூர்த்திகள் ஒருவனோ? கணிச்சியான் மகனோ?" என்று இராவணன் கேட்கின்றான். அதற்கு விடை கூறப்புகுந்த அனுமன், நீ சொன்ன புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன், இராமன் து தன் யான்" என்று கூறிவிட்டு, இராவணன் இராமனை அறிந்திருக்க முடியாது. அறிந்திருந்தாலும் தசரதனின் மகன் என்று மட்டுமே அறிந்திருப்பான்' என்ற கருத்தில் விடைகூறப் புகுகின்றான். இராமன், "தேவரும் பிறரும் அல்லன்; திசைக்களிறு அல்லன்; திக்கின் காவலர் அல்லன், ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்; மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப் பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்" - கம்ப. 1 மூவர் முதலிய யாரும் அல்லன் என்று அனுமன்