பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் ேே 439 போன்று ஆயிரக்கணக்கில் உள்ள சூரியமண்டலங்களும், விண்வெளியில் உள்ள உடுக்கள் மண்டலமும், என்றோ ஒரு நாள் தோன்றியவை; இன்று உள்ளவை; என்றோ ஒரு நாள் அழியப் போகின்றவை. அழிதல் என்றால் இல்லாமற்போதல் என்று பொருள் இல்லை. இன்றுள்ள நிலை மாறி வேறு நிலையை அடைவதையே அழிவு என்று கூறுகிறோம். தண்ணிர் பனிக் கட்டியாகி, மறுபடியும் தண்ணிராக மாறி, அடுத்து ஆவியாகச் சென்று மறுபடியும் தண்ணிராக மாறுவது போல்தான் இந்த அண்டங்களின் உற்பத்தி, ஸ்திதி இருத்தல்), நாசம் (அழிவு எனப்படுபவை. இந்த முதல் நிலை, இடைநிலை. கடைநிலைகளுக்குட்படாத ஒருபொருள் இங்கும் இல்லை; எங்கும் இல்லை. ஆனால், இந்த மூன்று நிலையும் இல்லாத ஒன்று உண்டா? உண்டு அது யாது? அதுவே பரம்பொருள் எனப்படும். அதற்குத் தொடக்கமும் இல்லை; இருக்கிறது எனப்படும் நடுவும் இல்லை; இல்லாது ஒழிந்தது எனக் கூறும் ஈற்று நிலையும் இல்லை. இருக்கும் ஒரு பொருளை இருக்கிறது என்று கூறும் இடைநிலையும் இல்லை என்று கூறுவது பொருத்தமா என்ற வினா எழும். முன்பு இல்லாதிருந்து ஒரு காலத்தில் மறுபடியும் இல்லையாக ஒழிந்து, இடைக்காலத்தில் மட்டும் இருப்பதைத்தான், இருக்கிறது என்ற நடுவே உள்ள நிலை என்று கூறுகிறோம். எனவே மூலம், நடு, ஈறு இல்லாதது பரம்பொருள் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே. எதிர்மறை முகத்தான் (By Negation) @6örsop filmsgu முற்படுவது நியாயம் ஆகாது என்னும் வாதத்தையும் உளங்கொண்டே கவிஞன் பேசுகிறான். மூலமும் நடுவும் ஈறும் இல்லாதாகிய காரணன் என்பதால் காரணனாக உள்ள பொருளுக்குத் தரப்பட்ட இலக்கணமாகும் இது. காலமும் கணக்கு நீத்தது இனி அடுத்துவரும் பகுதி ஓர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த என்பதாகும். உலகத்தின் பழைய சமயங்கள் அனைத்துமே காலம் என்பதை அறிந்து, அதனைப்