440 38 இராமன் - பன்முக நோக்கில் பகுதிகளாகப் பிரித்துள்ளன. பெரும்பான்மையானவர்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எனக் காலத்தை மூன்றாகப் பிரித்துக் கூறுவர். பெளத்த சமயத்தார் நிகழ் காலம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கணக்குப்படி இந்த வினாடி என்று கூறும்பொழுது, அந்த விநாடி காலாவதி ஆகி, இறந்த காலத்துடன் சேர்ந்துவிடுகிறது. விநாடி என்று சொல்லத் தொடங்கி வி என்றவுடன் அது இறந்ததாகவும், நாடி என்பது எதிர்காலமாகவும் இருக்க, அடுத்த எழுத்து வரும் பொழுது அதுவும் இறந்தகாலமாகிவிடுகிறது. எனவே, நிகழ்காலம் என்ற ஒன்று இல்லை என்பது அவர்கள் வாதம். நம்மவர்கள் காலக் கணக்கை மூன்றாகவே பகுத்து ஏற்றுக்கொண்டனர். கம்பநாடன், கால தத்துவம் பற்றி மிக நன்றாக அறிந்துள்ளான் என்று கருதுவதில் தவறு இல்லை. முதல், இடை, இறுதி என்று எவ்வாறு பகுக்கிறோம்? காலம் என்று கூறப்பெறும் அளவுகோலால் அளந்துதானே ஒன்றின் முதல், இடை, இறுதி நிலைகள் என்று கூறுகிறோம் : இந்த மூன்றும் இல்லாத ஒரு பொருள் என்றால், அது கால தத்துவத்தில் எங்கேயும் அடங்காது என்று சொல்லத் தேவை இல்லை. ஆதி என்றும் அந்தம் என்றும் கூறுவதே காலத்தை வைத்துத்தான் என்றால், ஆதி அந்தம் இல்லாத ஒரு பொருள் உறுதியாக கால தத்துவத்தினுள் அடங்காது என்பது எளிதில் விளங்கும். காலத்தைக் கடந்த ஒன்று எந்தக் கணக்கிலும் அடங்காத ஒன்றாகும் என்று கூறவும் வேண்டுமோ? அதைத்தான் கவிஞன், ஒர் மும்மைத்தாய காலமும், அதனை அளவு கோலாக வைத்துச் செய்யப்படும் கணக்கும் நீத்தவன்' என்று கூறுவது சிந்திக்கற்பாலது. மூலமும் நடுவும் ஈறும் இல்லாத காரணன் என்று கூறும் கவிஞன். 'கால தத்துவத்தைப் பற்றிப் பேசும்போதுமட்டும், ஒர்.கணக்கும் இல்லவன்' என்று கூறாமல், நீந்தவன்' என்று கூறுகிறான். இது மிகவும் ஆழமான பொருளுடையதாகும். அண்ட பிண்ட சராசரம் அனைத்தும் என்றோ ஒரு காலத்தில்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/461
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை