442 38 இராமன் - பன்முக நோக்கில் திடவி கம்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவை அவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளான். நாலாயிரம் - 2088 என்பது நம்மாழ்வார் அருளிப்பாடு. எனவே, கம்பநாடன் 'காலம் நீத்தவன் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே. இறைவனை 'காலாதிதன் (காலங்கடந்தவன்) என்று கூறுவதும் மரபு. இதில் கணக்கும் நீத்த என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அவன் ஒருவனைத் தவிர எண்ணுவதற்கு இரண்டாவதாக ஒன்று இருந்தால்தானே, இரண்டு மூன்று என்று கணக்கிட வேண்டிய தொல்லை நேரும். ஏகம் சத்' என்று வேதம் கூறுவதை இந்நாட்டவரும் கூறியுள்ளனர். ஒன்று நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை திருவாசகம் - கோயில் - 7 எந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டு நீ இதுவா' என்றால் இது அல்ல (ஒன்று நீ அல்லை) என்றுதான் கூறவேண்டியுள்ளது. ஆனால், உனையன்றி இரண்டாவதாக எண்ணக்கூடிய பொருள் எதுவும் இல்லை (அன்றி ஒன்று இல்லை). எனவே கணக்கிடுவதற்கு எதுவும் இல்லை. கணக்கை நீத்த (கடந்த காரணன் என்று கவிஞன் பேசுவது, எத்துணைப் பொருத்தம் உடையது என்பதை அறிய வியப்பாக இருக்கிறது! ஒரே சொல்லால் குறித்தல் இனி உடன்பாட்டுமுகமாகப் பரம்பொருளை ஒரு சொல் கொண்டு குறிக்கத் தொடங்குகிறான், கவிஞன். எந்த ஒரு சொல்லைச் சொல்வதன்மூலம் அனைத்தையும் கடந்தும் அனைத்தினுள்ளும் இருந்தும், அனைத்தையும் தோற்றுவித்தும் அனைத்தையும் காத்தும் அழித்தும் நிற்கும் அப்பொருளை ஏறத்தாழ எந்த சொல்லால் முழுவதுமாகக் குறிப்பிட முடியுமோ, அந்த ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறான். அனைத்தும் தோன்று தற்கும், இருத்தற்கும், அழிதற்கும் காரணமாக அவன் ஒருவனே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/463
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை