பரம்பொருளும் இராமனும் 38 443 இருத்தலின், கவிஞன் காரணன் என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறான். காரணன் என்று பொதுவுறக் கூறிவிட்டமையின் முதற்காரணமாகவும், துணைக் காரணமாகவும், நிமித்தக் காரணமாகவும் அவன் ஒருவனே உள்ளான் என்பது விளங்கும். மூவரும் ஒருவனானவன் இராமன் இவ்வளவு தருக்க ரீதியாகப் பேசிவிட்ட பிறகு, மும் மூர்த்திகள் என்று பேசி அதனையே பெரிது என ஏற்றுக் கொண்டுள்ள அவன் காலச் சமுதாயத்தையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை இருத்தலின், சிவபெருமானும் (சூலம்), திருமாலும் (திகிரி சங்கு, நான்முகனும் (கரகம்), தமக்கு உரிய இடமாகிய ஆல் இலையையும் (திருமால்), மலரையும் (நான்முகன்), கயிலை மலையையும் (சிவன்) விட்டு, மூவரும் ஒரு வடிவு கொண்டு இராமன் என்ற பெயருடன் அயோத்தி வந்தார்கள். - அப்படியானால், இத்துணைப் பெரியதும் சொற்பதம் கடந்ததுமான பரம் பொருள் ஏன் அயோத்தி வரவேண்டும் என்ற வினாவை எதிர்பார்த்து விடை கூறுகிறான் அடுத்த பாடலில்: அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உகநூறி, தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். . கம்ப. 5885 இப்பாடல் தரும் செய்தி: அறத்தை நிலைநாட்டி, வேதம் மக்கள் மேல் கொண்ட அருளால் கூறிவைத்த நீதியின் உட்பொருளை, இவ்வுலகம் அறிந்து மேற்கொள்ள அவர்களை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/464
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை