பரம்பொருளும் இராமனும் ே 445 பாடிக் கறக்கணும் என்பது இந்நாட்டுப் பழமொழி. எனவே, ஒரு சிலருக்கு உபதேசம் செய்தால் போதாது. வள்ளுவப் பேராசான் இத்தகைய மக்களை நன்கு எடைபோட்டு அச்சமே கீழ்களது ஆசாரம் (திருக்குறள் - 1075) என்று பேசுகிறார் அல்லவா? அம்மட்டோடு நிறுத்தாமல், சொன்னவுடன் கேட்டுப் பயன்படுவர் சான்றோர்; கீழ்மக்களைக் கொன்றால்தான் அவர்களைத் திருத்த முடியும் என்ற கருத்தில் சொல்லப் பயன்படவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். திருக்குறள் - 1078 என்றும் பேசுகிறாரல்லவா? எனவே, அறத்தை நிலைநாட்டி நீதித்திறம் தெரியுமாறு செய்து, செந்நெறி பூணச் செய்தும் பயன்படாது போகையில், எதற்கும் கட்டுப்படாத கீழ் மக்களை அழித்துவிடுகின்றான் என்ற கருத்தையும் இறந்து உக நூறி என்ற சொற்களால் பேசுகிறான். அடுத்துத் தக்கோர் துயர் துடைத்து என்று பேசுகிறான். பரம் பொருளின் அருளை மறக் கருணை என்றும் அறக்கருணை என்றும் பிரித்துக் கூறுவர். இறந்து உக நூறுதல், மறக் கருணையின்பாற்படும்; தக்கோர் துயர் துடைத்தல், அறக் கருணையின் பாற்படும். இவை அனைத்தையும், இவை அனைத்தையும் தானே முன்னின்று செய்வதற்காகவே அவன் இங்கு வந்து பிறந்துள்ளான் என்கிறான். மானுடச் சட்டை ஏன்? "இத்துணை ஆற்றல் பொருந்திய பரம்பொருள் இச்சா சக்தியாலேயே இதனைச் செய்யமுடியாதா? ஏன் பிறப்பெடுத்து வரவேண்டும்” என்று வினவப்படலாம். அவன் ஆற்றலால் இவற்றைச் செய்ய முடியினும், மக்கள் இதனால் முழுப் பயனை அடையவேண்டும் என்றால் மக்களுடன் நேரிடைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆறு நிரம்பத் தண்ணீர் இருப்பினும் நாம் நம் சக்தி அளவாகத்தானே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/466
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை