பரம்பொருளும் இராமனும் ேே 447 எனவே அவன் தண்டிக்கப் புகுந்தால், அது மைந்தனைத் தந்தை தண்டிப்பது போன்றதே தவிரப் பகைவன் தண்டிப்பது போன்றது அன்று. இந்த ஒரு பாடல்மூலம், இந்தக் காப்பியம் முழுவதிலும் கவிஞன் தான் கூறவந்த இறை இலக்கணத்தைத் தொகுத்துக் கூறிவிடுகிறான். பரம்பொருளின் இலக்கணம் கூறியாயிற்று. எத்துணைத்துரம் அறிவினால் ஆய முற்பட்டாலும், ஒரளவே அறிந்துகொள்ளக்கூடிய பரம் பொருளைப்பற்றிக் குறிகள், அடையாளங்கள் முதலியவற்றைக் கொண்டு ஓரளவு விளக்க முயன்றுள்ளான். கம்பன் இராம காதை பாடியது ஏன்? இராம காதையைக் கம்பன் எடுத்துக்கொண்ட நோக்கத்தையும் ஓரளவு இதன்மூலம் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக உயரிய வாழ்வு வாழ்ந்த இத் தமிழர், ஒப்பற்றது என்று போற்றியது கற்புநெறி. அவர்கள் வாழ்ந்து, அனுபவம் பெற்று, அறிவினால் ஆய்ந்து, உணர்வினால் உணர்ந்து, ஒப்பற்றது என்று கூறியது அறநெறி வாழ்க்கை; அத் தமிழர் கண்ட கடவுட் பொருள் என்ற இம் மூன்றும் இராமகாதையில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால், கம்பன் இக்கதையைத் தேர்வு செய்து கொண்டான். முடிவாக தமிழ் மக்கட்கு இயல்பாக இருந்த கவிதை உணர்வைத் தூண்டிவிட்டு, அற்புதமான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பை நல்கினான் கம்பநாடன். அடுத்தபடியாக, அந்த இனத்திற்கு இருந்த குறைபாட்டை, இலைமறை காயாக, எடுத்துக் கூறி அவர்களைத் திருத்த முயன்றான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வைணவம், சைவம் என்ற வட்டத்துக்குள் நின்று பக்திப் பயிரை வளர்த்தனர். அவர்கள் காலத்தில், சமய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, நாம ருபங்கடந்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/468
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை