கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 29 வல்லவர்களாக இருந்தமையின் இராமன் முதலியவர்கட்கு லக்கினம், நட்சத்திரம் முதலியவற்றை முதன்முதலாக கூறிய பெருமை கம்பனுக்கே உண்டு என்று நினைப்பதில் தவறில்லை. தென்பிராந்திய வான்மீகியில் காணப்படும் 18ஆவது சருக்கத்தில் 9, 11, 13, 13ஆம் சுலோகங்கள் வடபிராந்திய வான்மீகத்தில் இல்லையாதலால், கம்பன் காலத்திற்குப் பிறகு வான்மீகியிலும் இது இடம்பெற வேண்டும் என்ற கருத்தில் பிற்காலத்தார் பாடி வான்மீகியில் சேர்த்திருக்கலாம் என்று எண்ணுவதிலும் தவறில்லை. மேலும், தென்பிராந்திய வான்மீகியில் உள்ள முதல் 18 சருக்கங்கள், வடபிராந்திய வான்மீகியில் இவ்வாறு இடம் பெறவில்லை. ஆதலால் இங்குக் காணப்படும் 18 சருக்கங்களுமே பிற்கால இடைச் செருகல் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். தமிழ் இராமாயணம் இதுகாறும் கண்டவற்றால், இராமகாதை வேதத்திலேயே காணப்படுவதாகச் சொல்லிப் பழமை பாராட்டுதல் பொருந்தாது என்றும், புத்த ஜாதகக் கதைகளிலிருந்து வான்மீகமாகிய ஆதிகாவியமும் பிற இராமாயணங்களும் பல வகையில் மாறுபடுகின்றன என்றும், வான்மீகத்தின் பல வடிவங்கள் அந்தந்தப் பகுதியின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எதிரொலிக்கும் மாற்றங்களைக் கொண்டுள்ளன என்றும் தெளிவாகிறது. மேலும், தனக்கு மூலமாகக் கொண்ட வான்மீகத்தினின்றும் கம்பன் பல மாற்றங்களைச் செய்துள்ளான் என்பதைப் பாலகாண்டச் செய்திகள் கொண்டு காண முடிந்தது. சுருங்கச் சொன்னால், கம்பன் கொண்ட மூல ஆதாரம் வடதிசைச் சார்பினதே யெனினும், தமிழர்க்கே உரிய பக்திநெறி, பண்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பத் தமிழ் இராமாயணத்தையே பாடியுள்ளான் என்பதை உணர வேண்டும். - .
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை