கம்பனின் காப்பிய நோக்கம் 38 31 வான்மீகமும் அவதாரக் கருத்தும் வான்மீகியைப் பொறுத்தவரை, ஐயத்திற்குரிய பாலகாண்டத்தை விட்டுவிட்டால்,ம அயோத்தியா தொடங்கி யுத்த காண்டத்தின் நடுப்பகுதிவரை இராமன் மனிதர்களுக்குள் சிறந்தவனாகக் காட்டப்பெறுகிறானே தவிர, அவதாரமாகப் பேசப்படவில்லை. பாலகாண்டம் தொடக்கத்தில், உலகில் வாழும் மனிதர்களுள் எல்லா நற்பண்புகளுக்கும் உறைவிடமாக யாரேனும் உளரா என்று வான்மீகி கேட்க, நாரதர் அப்படி ஒருவன் உளன் என்று கூறுவதாகப் பாலகாண்டத்தின் முதல் சருக்கம் மூன்றாவது பாடல் முதல் பல பாடல்கள் சொல்லிச் செல்கின்றன. நாரதர் கூறிய விடையைச் சுருக்கமாகக் காண்பது பயனுடையதாகும். “இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன் : வீரியமுடையவனாகவும், அறங்களை அறிந்தவனாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும், விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன் (வான்:1-12) என்ற வான்மீகியின் வினாக்களுக்கு விடை கூறுமுகமாக நாரதர், இட்சுவாகு வம்சத்தில் கெளசல்யை என்ற பெண்ணிற்கு மகனாகத் தோன்றிய இராமன் என்ற பெயருடைய ஒருவன் உள்ளான். நீர் சிறந்த பண்புகள் என்று கூறும் அனைத்தும் அவனிடம் ஒருங்கே அமைந்துள்ளன. பராக்கிரமத்தில் திருமாலை ஒத்தவனாகிய அவன் வரலாற்றைக் கூறுகிறேன்' வான்மீகியின் பாலகாண்டம் இவ்வாறு தொடங்குகிறது. மானுடம், தெய்வம்: இரண்டும் சேர்ந்த கோலம் வான்மீகியின் இந்தத் தொடக்கம் கம்பனைப் பெரிதும் பாதித்திருக்க வேண்டும். எனவே, அவன் படைத்த இராமன் இத்தனைப் பண்புகளுக்கும் கொள்கலன் ஆகிறான். அதே நேரத்தில் தமிழகத்தில் இராமன் திருமாலின் அவதாரம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை