பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ேே. இராமன் - பன்முக நோக்கில் என்று பரவியிருந்த நெடுமொழியும், ஆழ்வார்கள் அருளிச் செயலில் காணப்பெற்ற இராமன் திருமாலின் அவதாரம் என்ற கருத்தும் கம்பனை ஆட்கொண்டன என்பதில் ஐயமில்லை. இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து, ஒரே மனிதனிடத்தில் இந்த இரண்டு கொள்கைகளையும் இணைப்பதில் பலசங்கடங்கள் ஏற்படுகின்றன. தெய்வம் ஒரு செயலைச் செய்கிறது என்று கூறிவிட்டால் தர்க்கரீதியில் அ ச் செயலின் காரண காரியங்களையோ பலாபலன்களையோ ஆராய்வது மனித அறிவுக்கு அப்பாற்பட்ட செயலாகும். இதை விட்டுவிட்டு மனிதன் என்ற முறையில் ஒரு பாத்திரம் செய்கின்ற செயலை அறிவின் துணைகொண்டு ஆராய்வது நன்மை பயப்பதாகும். முழுவதும் தெய்வமாகக் கொண்டு விட்டால் அதனுடைய செயல்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பது ஒருபுறம் இருக்க, சாதாரண மனிதர்கள் அதனைப் பின்பற்றுவதும் இயலாத தாகும். முழுவதும் அவதாரம் என்று கொண்டுவிட்டால், இராமனுடைய நற்பண்புகள் வணக்கத்திற்குரியனவாக அமையுமே தவிர சாதரண மனிதர்கள் எவ்வளவு முயன்றாலும் பின்பற்றக் கூடியனவாக அமையமாட்டா. எனவே, ஆழ்வார்களின் அடிப்படையில் நின்று இராமனை முற்றிலும் அவதாரமாகவே கொள்வதில் இருக்கின்ற சங்கடத்தைக் கம்பன் புரிந்து கொள்கிறான். ஆனால், அதே நேரத்தில் வான்மீகியில் காணப்பெறாத இந்த அவதாரக் கொள்கையை விட்டு விடவும் மனமில்லை கம்பனுக்கு. இதுபற்றிப் பல காலம் ஆய்ந்திருக்க வேண்டும் கம்பநாடன். முற்றிலும் அவதாரமாகப் பாடிவிட்டால் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு இறைவனை அடைய முற்படும் ஒரு சிலருக்கு மட்டுமே அவன் நூல் பயன்படும். அது தேவையா என்று கம்பன் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆழ்வார் பெருமக்கள் எம்பெருமான் அருளைப் பூரணமாகப் பெற்று அந்த அருளில் திளைத்துப் பாடிய 4000 பாடல்கள்