34 38 இராமன் - பன்முக நோக்கில் கொள்கிறான். ஆனால் சாதாரண மனிதனாக அன்று; ஒரு மாமனிதனாக, குறிக்கோள் தன்மைபெற்ற (ideal man) மனிதனாக நடந்து கொள்கிறான். எந்த நிலையிலும் அவனுடைய செயல்களும் எண்ணங்களும், மனித அறிவு கொண்டு ஆய்வு செய்யப்படக் கூடிய ன வாய் அமைந்துள்ளமை கம்பனுடைய மாபெரும் ஆற்றலை வெளிக்காட்டும். கூடுமானவரை காப்பியப் புலவன் எந்தப் பாத்திரத்தைப் பற்றியும் தன் கருத்தை வெளியிடக் கூடாது என்ற கொள்கையைப் பெரும்பாலும் கம்பன் கடைப்பிடித்துச் செல்கிறான். என்றாலும், எம்பெருமானுடைய பூரண அவதாரம் இராமன் என்பதை அவனால் மறக்க முடியவில்லை. கவிஞன் கண்ட கடவுட் கொள்கையை எவ்வாறு இராமன்மேல் சார்த்திப் பேசுகிறான் என்பதைப் பின்னர் விரிவாகக் காணலாம். இனிவரும் பகுதிகளில் அவன் படைத்த இராமனை மனிதனாகக் கொண்டே, மாமனிதனாகக் கருதியே இவ் ஆய்வு செய்யப்படும். என்றாலும், சமயம் நேரும் போதெல்லாம், கவிஞன் கூற்றாக இராமனைச் சுட்டக்கூடிய இடங்களிலெல்லாம் இராமனைப் பரம்பொருளாகக் காட்ட மறந்ததே இல்லை இக் கவிஞன். இக்கட்டுரைகளின் வளர்ச்சியில் அவ்விடங்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும். இந்நூற் பொருள் சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமனைப் பற்றிய பொதுமக்களின் எண்ண ஓட்டங்கள் மக்களும் இராமனும்' எனும் தலைப்பில் முதலில் பேசப் பெறுகின்றன. அடுத்து, தந்தையும் இராமனும், தாயரும் இராமனும், தம்பியரும் இராமனும், சீதையும் இராமனும் உடன்பிறவாத் தம்பியரும் இராமனும், வசிட்டனும் இராமனும், விசுவாமித்திரனும் இராமனும், முனிவர்களும் இராமனும், அனுமனும் இராமனும், அரக்கர்களும் இராமனும், கும்பகர்ணனும் இராமனும், இராவணனும் இராமனும், என்ற பல
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை