பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனின் காப்பிய நோக்கம் 38 35 தலைப்புகளில் பல கோணங்களில் இராமனைப் பார்ப்பதேஇந்நூலின் பெரும்பகுதிப் பணியாகும். அடுத்து, இராமனைப் பரம்பொருள் என்று அறிந்து பேசும் சரபங்கன், இந்திரன், விராதன், கருடன் முதலியோர் கண்ட முறையில் இராமனைக் காண்பது அடுத்த பகுதிப் பணியாகும். இறுதியாகக் காப்பியப் புலவன் இராமனைப் பற்றிக் கூறும் பகுதிகளும், கடவுள் வாழ்த்துப் பகுதிகளும் ஒரளவு ஆயப்பெறும். இம்முறையில் ஆய்வு செய்வதால் கவிஞன் படைத்த இராமனின் முழு வடிவத்தையும் (அகவடிவம், புறவடிவம்) காணும் ஒரு முயற்சியே ஆகும் இந்நூல். -