38 38 இராமன் - பன்முக நோக்கில் அனைத்து உயிரினங்களையும் அவன் தன் உடமையாகப் பெற்றுள்ளான் என்பதையும், உயிர்கள்மாட்டுக் கொண்ட பரம கருணை காரணமாக அவர்களை நிறுத்திக் குசலம் விசாரிக்கின்றான் என்பதையும் கூறிவிடுகின்றான் கம்பன். இராகவன் மூலப்பரம்பொருளே என்பதை முதன்முதலாகக் காப்பியத்தின் 313ஆம் பாடலில் கூறிய கவிஞன், இதே கருத்தை விடாமல் பற்றி நின்று காப்பியத்தின் இறுதியில் 9837ஆம் பாடலில், "இவனேதான் அவ்வேத முதல்காரணன்" என்று கூறிமுடிப்பதைக் காணலாம். இந்த இரு இடங்களையும் நோக்கும் பொழுது ஒரு புதுமை மனத்தில் தோன்றாமல் இராது. மனிதனாகப் பிறந்து, வளர்கின்ற கவிஞனுடைய கணிப்பில் மற்றொரு மனிதனாகிய இராமன், முப்பரம் பொருளுக்கும் முதல்வனாகக் காட்சி அளிக்கின்றான். இந்தக் கணிப்புச் சரியானதே என்பதை நிறுவுவதற்காக 9837ஆம் பாடலில் இவனேதான் அவ்வேத முதல்காரணன்' என்ற கணிப்பை இராவணன் செய்வதாகக் கவிஞன் சொல்லிக் காட்டுகிறான். ஏன்? முக்கோடி வாழ்நாள் முயன்றுடைய பெருந்தவம் முதலியவற்றோடு ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்த அறிவு அமைந்தவனும் ஆகிய இராவணனே, 'இராமன் என்ற மனிதன் யார் என்று கணித்துக் கூறுகிறான். இந்த மானுட இராமன், சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன் என்று கூறிவிட்டு, இவனோ அவ் வேத முதற்காரணன் என்ற முடிவிற்கு வருகிறான். இதைவிடச் சிறப்பாக ஆய்வு செய்து வேறுயாரும் வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பதை உணர்த்தவே இராவணன் கூற்றாக இதைச் சொல்லுகிறான் கவிஞன். மணிவாசகர் இளங்கோ அடிகள் தரையில் நடந்து வரும் இராமனைப் பரம்பொருள் என்று, எமை உடை இறைவன்' என்ற தொடரால் நிறுவிய கவிஞன், அடுத்த மூன்று அடிகளில் அவனது கருணையை வியக்கின்றான். இந்த இடத்தில் மணிவாசகப்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை