மக்களும் இராமனும்ேே 39 பெருமானுடைய திருவாசகத்தின் ஒரு பகுதி நினைவுக்கு வருகிறது. குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த குரு தன் திருவடிகளைப் பூமியில் பதித்திருந்தார். அதைக் கண்ட மணிவாசகர், கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவன் என யானும் தேறினன் காண்க. - திருவாசகம் - திருவெண்பா 60 - 63 - பரம்பொருள் இராமன் என்ற உருவிலோ, குருந்த மரத்தின் அடியில் உள்ள குரு என்ற உருவிலோ மண்ணில் திருவடிகள் படும்படி வருவது அவனுடைய கருணைக்கோர் எடுத்துக்காட்டு என்பதை கம்பனும் மணிவாசகப் பெருமானும் உணர்ந்துள்ளார்கள் என்பதையே, இவ்விரு பாடல்களும் தெரிவிக்கின்றன. திருவடி நிலந்தோய வருகின்ற பெருமையை, மணிவாசகரும் கம்பனும் உளமுருகி நினைப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே, சிலப்பதிகார ஆசிரியர் இதனை, "மூவுலகு மீரடியான் முறை நிரம்பா வகைமுடியத் . • மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் காண்போந்து சிலம்பு, ஆய்ச்சியர் குரவை 3, 36 என்று பாடுகிறார். வான்மீகி, பெரியவாச்சான் பிள்ளை மிகப் பழங்காலந்தொட்டே திருவடிப் பெருமையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் ஆதலின், இம் மூவரும் பாடிய சிறப்பைக் கண்டு திருவடி பற்றி ஒன்றும் கூறாமல், சக்கரவர்த்தித் திருமகன் எளிய மக்களை இடையே நிறுத்தி அவருடன் பேசினான் என்ற பகுதியை வான்மீகியும், அயோத்தியா காண்டம் 2ஆவது சருக்கத்தில் 33ஆம் சுலோகத்தில் பாடியுள்ளார். வான்மீகி பாடிய இராம
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை