பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 38 இராமன் - பன்முக நோக்கில் சரிதத்தில் இந்தப் பகுதியில் ஈடுபட்ட பெரியவாச்சான் பிள்ளை இதற்கொரு விளக்கம் எழுதியுள்ளார். நினைந்து நினைந்து மகிழ்வதற்குரிய அப்பகுதியின் கருத்து வருமாறு: "பூரீராமன் சாதாரண ஜனங் களிடையே சென்று அன்பு ததும்பப் பேசியவுடன் அதைக் கேட்ட அந்த மக்களின் மனம் குளிர்ந்து போயிற்று. எப்படி என்றால், வறண்டு பிளந்துபோன நிலத்தில் ஒரு பாட்டம் மழை பெய்தாற் போல் குளிர்ந்தது” என்று சொல்லும் அருமை அறிந்து போற்றற்குரியது. ,, . ." பெரியவாச்சான் பிள்ளை மக்கள் மனத்துள் தோன்றிய மகிழ்ச்சியை உவமையுடன் எடுத்து விளக்கியதைக் கம்பநாடன் மற்றொரு விதமாக எடுத்துக் காட்டுகிறான். எதிர்வருபவர் களிடத்தில் எமை உடை இறைவன் குமரரும் வலியர் கொல் இடரிலை? என்று வினவியவுடன் அவர்கள் என்ன பதிலிறுத்தார்கள் என்று கம்பன் பேசுகிறான்: "ஐயனே! எங்கள் நலனைக் கேட்டாய், நாங்கள் நலமே உள்ளோம், நின்னை அரசனாக உடைய எங்களுக்கு எக்குறையும் இல்லை. எங்கள் உயிரோடு ஏனையவற்றையும் நான்முகனுடைய யுகம் முடிகின்றவரை நீயே ஆள்வாயாக’ என்ற பொருளில் அஃது, "ஐய! நினை எமது அரசு என உடையேம்; இஃது ஒரு பொருள் அல, எமது உயிருடன் ஏழ் மகிதலம் முழுதையும் உறுக, இம் மலரோன் உகுபகல் அளவு என, உரை நனி புகல்வர். - கம்பர் 312 எனப் பாடியுள்ளான். சாதாரண மக்கள் பார்வையில்...... திருமணச் செய்திகேட்டு அயோத்தியில் உள்ள ஏனைய இரு மைந்தர், மனைவி மற்றும் சுற்றத்தாருடன் மிதிலைக்கு வருகிறான் தசரதன். புறநகரிலிருந்து தம்பியர் மூவரும் தன்னைச் சுற்றியிருக்க, இராமன் தேரில் வருகிறான். மிதிலை