பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 38 இராமன் - பன்முக நோக்கில் \ உறுப்புகளை உடையவன் முகம் மிக இன்றியமையாத தாகிவிடும். ஆனால், இராமனைக் காணும் புதிய அனு பவத்தில் இந்நிலை மாறிவிடுகிறது. இப்புதிய அனுபவம் என்பது யாது! தோள்கண்டார், தோளேகண்டார், தாள்கண்டார், தாளேகண்டார், தடக்கை கண்டாரும் அஃதே என்று கூறியதால் காண்பவர்களுடைய பார்வை இராமன் என்ற முழுவடிவின் எந்த உறுப்பில் முதன்முதல் பட்டதோ அந்த உறுப்பை விட்டு அப்பால் போகவில்லை. காரணமென்ன? சாதாரண வீரர்களின் கைகள், தோள்கள் என்பவை தனித்தன்மை பெறா. அதை உடைய மனிதனோடு அவன் முகம் முதலிய உறுப்புகளோடு சேர்ந்தபொழுதுதான் மதிப்பு. அந்த முழுமையான மனிதனிடம் இருந்து பிரிக்கப்பட்டால் இந்த உறுப்புகள் பயனற்றுப் போய்விடும்; தனியே இவற்றிற்கு மதிப்பே இல்லை. ஆனால், இராமனைப் பொறுத்தமட்டில் நிலைமையே வேறு. இராமனின் கைகள், கால்கள் என்பவை தனித்தனியாக வும், உடலின் ஒர் உறுப்பாகவும் இலங்குகின்றன. கை கமலம், வாய் கம்லம் என்று சொல்லும் பொழுது அவற்றின் தனித் தன்மையை வளர்க்க முற்படுகிறார், ஆசிரியர். எனவே, தோள் என்ற உறுப்பு முழுத்தன்மை பெற்றதாய், தனித் தன்மை பெற்றதாய் பிற உறுப்புகளோடு தொடர்பில்லா விடினும் முழுத் தன்மையோடு விளங்குகின்றது. பிற உறுப்பு களோடு சேர்ந்தபொழுதும் அந்த முழுத் தன்மையில் இந்த முழுத் தன்மையும் சேர்ந்து ஒரே முழுத் தன்மையாக அது விளங்குகிறது. இங்கே சொல்லப்பட்ட கணக்குமுறை ஏனைய உறுப்புகளுக்கும் செல்லும், மேலே சொல்லப்பட்டதை மனம் வாங்கிக்கொள்ள மறுத்தால் அதைக் கணித முறையில் எளிதாக விளக்க முடியும். வடிவு கடந்த மூலப்பொருள் ஒரு வடிவு மேற்கொள் ளும்பொழுது ஒவ்வோர் உறுப்பும் மூலப் பரம்பொருளாகவே இருக்கும். கணிதத்தில் கற்பனை கடந்து நிற்கின்ற எண்களை யெல்லாம் தாண்டி நிற்கின்ற ஒன்றை எண்ணிலி (infinity)