44 38 இராமன் - பன்முக நோக்கில் அமைச்சர் முதலானோர், வேதியர்கள், முனிவர்கள் போன்ற வர்களும் பொதுமக்கள் என்ற தலைப்பில் அடங்குவர் ஆதலின் அவர்கள் இராமன் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவிஞன், தசரதன் மந்திராலோசனைப் படலத்தில் எடுத்துக் காட்டுகிறான். 'இராமனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட நினைக்கின்றேன். அதுபற்றி உங்கள் கருத்து யாது: என்று பொதுவாக மந்திரக்கிழவோரை நோக்கித் தசரதன் கேட்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள். தனித்தனியாக ஒவ்வொருவரும் பேசாமல், தங்கள் சார்பாக வசிட்டனைப் பேசுமாறு வேண்டிக் கொள்கின்றனர். அந்நிலையில் நாட்டு மக்கள் இராமனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை வசிட்ட முனிவன் பின்வரும் தொடர்களால் வெளியிடுகிறான்: "மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலைவளர் பெண்ணினும் நல்லள்; பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்கண்ணினும் நல்லன், கற்றவர், கற்றிலாதவரும், உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்." - கம்ப், 1352 ...நின் குலமைந்தனை, வேதியர் முதலோர் யாரும், யாம் செய்தநல் அறப்பயன்' என இருப்பார்."
- . கம்பர் 1351 "மனிதர், வானவர், மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை;
- g
. . . . . கம்ப 1353 இத் தொடர்களால் இராமனுக்குரிய தனிச்சிறப்பை வெளியிடு கிறான் கம்பன். வானவர், வேதியர், கற்றவர், கற்றிலாதவர், மனிதர் என்ற சொற்களால் வேறுபாடுடைய பலரைக்