46 38 இராமன் - பன்முக நோக்கில் என்ற நம்மாழ்வார் கூற்றையும் காணலாம். இக் கருத்துகளை மனத்தில் வாங்கிக்கொண்டுதான் கம்பன் 'உயிரினும் உவப்பார் என்று பாடுகிறான். வசிட்டனை அடுத்துப் பேசிய சுமந்திரன் அரசர்கள், மற்றவர்கள், மந்திரக் கிழவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவருடைய மனமும் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது என்று கூறுவது மேலே சொன்ன கருத்தை வலியுறுத்துவதாகும். தசரதன் மந்திர ஆலோசனையில் இராமனுக்கு மறுநாள் முடிசூட்டப்பட வேண்டும் என்று எடுத்த முடிவின்படி மக்களுக்கு வள்ளுவன் பறை அறைந்து அறிவுறுத்தினன். 'இராமன் முடிசூடுகிறான்' என்பதை அறிந்தவுடன் மக்கள் மனநிலையையும், அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களையும் பலகவிதைகளில் கூறிச் செல்கிறான் கம்பநாடன். "ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப்பாடினர்; வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம்மயிர் போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்; தூர்த்தனர் நீள்நிதி, சொல்லினார்க்கு எலாம்." . கம்ப. 1433 ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர் என்ற பல்திறத்து மக்களின் மகிழ்ச்சியைக் கூறவந்த கவிஞன் அவர்களை இனம் பிரித்து ஒவ்வொரு கூட்டத்தாரின் மகிழ்ச்சிக்கும் ஒவ்வொரு உவமை கூறுகிறான். "மாதர்கள், கற்பின் மிக்கார்; கோசலை மனத்தை ஒத்தார்; வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறுஉளமகளிர் எல்லாம் சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் - リT5F சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்." - - கம்ப. 1560 வயது முதிர்ந்த, தாய்மை நிலையில் முதிர்ந்து நின்ற முது பெண்டிர் கோசலை மனத்தைப் போல மகிழ்ச்சி நிரம்பியவர்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை