மக்களும் இராமனும்ேே 47 ஆயினர். இராமனை அரசன் என்றோ பரம்பொருள் என்றோ கருதாமல் மகன்மை முறை கொண்டவர்களின் மகிழ்ச்சி இதில் கூறப்படுகிறது. ஏனையோர் மகிழ்ச்சியிலும் தாய் அடைகின்ற மகிழ்ச்சி ஈடு இணையற்றதல்லவா? விருப்பு, வெறுப்பு, சுயநலம் என்ற எதுவும் கடுகளவும் கலக்காத மிகத் தூய்மையான மகிழ்ச்சி அல்லவா. மகன் சிறப்பைக் கேட்டுத் தாய் அடையும் மகிழ்ச்சி - தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் அடையும் மகிழ்ச்சி - ஈன்ற பொழுதைவிடப் பெரிதாகும் அல்லவா? அதனால்தான் கோசலை மனத்தை ஒத்தார் என்று பாடினான் கவிஞன். வேதியர்கள் வசிட்டனைப் போன்று அந்த நேரத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும் இனி என்ன நிகழப் போகிறதோ என்று எதிர் காலத்தைக் கணிக்கிற அச்சம் கலந்த மகிழ்ச்சியால் வசிட்டன் ஒத்தார் என்றான் கவிஞன். முக்காலத்தையும் அறியும் வசிட்டன் பின்னே நிகழப்போவதை அறிவானாயினும் தன் விருப்பு, வெறுப்புகளைத் துறந்து கர்மயோகியாக மாறி அந்த நேரத்தில் தான் செய்ய வேண்டிய பணியைச் செய்கின்றான் அல்லவா? அவனை ஒத்த வேதியர்களும் விளைவினை அறிந்தாரேனும் இப்பொழுது மகிழாமல் இருக்க முடியவில்லை. வேதியர் வசிட்டன் ஒத்தார் என்று கவிஞன் கூறினானே தவிர அவர்கள் மகிழ்ந்தார்களா, எதிர்காலத்தை நினைத்து வருந்தினார்களா என்று சொல்லவில்லை. இப்பொழுது நடைபெறுவதை (முடிசூட்டலை நினைந்து மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லலாம். வசிட்டன் போன்றவர்கள் இராமாவதாரக் காரணத்தை நன்கு அறிந்தவர்கள் ஆதலால் தேவர் முதலாயினோர்.துன்பத்தைப் போக்கவந்த பெருமான், தான் இவ்வுலகிற்கு வந்த பணியை நிறைவேற்ற வேண்டுமானால் இந்த முடிசூட்டு விழா மிக முக்கியமானது. இது நடைபெறவில்லை யென்றால், கைகேயி வரங்கேட்டு இராமனைக் காட்டிற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறாது. ஆகவே, இறைவன் இவ்வுலகிற்கு வந்ததன் பயன் விளையவேண்டுமானால் முடிசூட்டுவிழாவே அதற்குக் கால்கோள் இடும் நிகழ்ச்சியாகும். அதனால்தான் போலும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை