மக்களும் இராமனும்ேே 49 (திருவாய்மொழி. 348) என்ற வாக்கிற்கிணங்க அரசனாகப் போகின்ற இராமனைத் திருமாலோடு உவமித்தான் என்று கொள்வதும் ஒன்று. அடுத்தபடியாக இப்பாடலில் இராமனுடைய முடிசூட்டு விழாவினைக் காண வராதவர்கள் யார் யார் என்று கூறவந்த கவிஞன், இலங்கை அரக்கர்களும் இடம் பெயரமுடியாத மலைகளுமேயாம் என்கிறான் கவிஞன். இலங்கை நிருதர்கோன் ஒருவேளை வந்திருந்தால் அவதார நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கும். எனவே, அவர்கள் வரவில்லை என்ற குறிப்பையும் கவிஞன் இங்கே பேசுகிறான். அவலச் சூழலில் மக்கள் கணிப்பு இனி இராமனோடு மக்களைத் தொடர்புபடுத்திக் காட்டும் பகுதி, சுமந்திரனால் கைகேயி ஆணையின்படி இராமன் அழைத்துவரப்பட்டபோது, மாந்தரிடை நிகழ்ந்த செயல்களைக் கூறும் பகுதியாகும். இந்தப் பகுதியை கைகேயி சூழ்வினைப் படலத்தில் கவிஞன் அமைத்திருப்பது எல்லை யற்ற துயரம் என்னும் சுவையை அடித்தளமாகக் கொண்டே ஆகும். இராமன் பவனி வரும்பொழுது அவன் உள்பட மாந்தர் அனைவரும் பெரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சியைத் தகர்க்கும் ஒரு வெடி அதே அயோத்தியில், ஒர் அரண்மனையில் தயாராகி வருகிறது. இராமனை அழைத்துவருமாறு சுமந்திரனை ஏவியவள் கைகேயியே. அவள் அந்தக் கட்டளை இடும்பொழுது இராமனுடைய வரலாறு ஏற்கெனவே புதிய திசையில் திருப்பி விடப்பட்டுவிட்டது. இந்த மாபெரும் செயலைச் செய்த கைகேயி தன் முகத்தில் ஒரு சிறிதளவேனும் மாறுபாடு காட்டியிருப்பாளேயாகில் நுண்ணறிவினன் ஆன சுமந்திரன் ஒரளவாவது சந்தேகித்திருப்பான். எனவே, தன் மனத்தில் ஒடும் எண்ணங்களை முகம் காட்டாமல் மற்ைத்துக் கொள்ளும் பேராற்றலை நாம் உய்த்துணர வைக்கிறான் கவிஞன். அ-4
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை