54 36 இராமன் - பன்முக நோக்கில் துள்ளிவரும் கன்றைக் கண்ட தாய்ப்பசுவின் அன்புபோல் இவருடைய உள்ளம் அன்பால் நிறைந்து என்பே உருகுகின்றது போன்ற உணர்வைப் பெறுகின்றார்கள். இறைவன் மாட்டுத் துய அன்புடையவர்கள்மட்டுமே அவனைக் காணும்பொழுது என்புருகி நிற்பார்கள். இராமனைக் கண்டவுடன் இவர்கள் உள்ளம் உருகி அன்பு நிறைந்து என்பு உருகுகின்றார்கள் என்றால் இவன் தமை ஒத்தோர் மானுடன் அல்லன். இந்த உருக்கத்தைத் தரக்கூடியவன் இறைவன் ஒருவனே ஆவான். இவ் உருக்கம் எமக்கேற்பட்டதால், இவன் பரம்பொருளே என்று நினைத்தனர். சிலர். இரண்டு வழிகள் இந்த இரண்டு பாடல்களும் கவிஞனுடைய ஆன்மீக வளர்ச்சியையும், இறைவனை அறிந்துகொள்ள மக்கட்குக் கிடைத்துள்ள இரண்டு பெரிய வழிகளையும் அறிவுறுத்தி நிற்கின்றன. இறைவனைக் காலமும், கணக்கும் நீத்தவன் என்று அறிவின் வழிக் காண்பது ஒரு வழி. இவ்வழி அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய வழி அன்று. சொல்பதம் கடந்து நின்ற அப் பரம்பொருளை அறிவு கொண்டு ஆராயாமல் பக்தி அடிப்படையில், அன்பின் அடிப்படையில் உணர்வது ஒரு வழியாகும். இவ்வழி எளிதானதும், பலருக்கும் பயன்படக் கூடியதும் ஆன வழியாகும். இவை இரண்டு வழிகளும் பல காலத்திற்கு முன்னரே இத் தமிழர்களால் அறியப்பட்டிருந்தன. - “நின் அளந்த அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் நின்னடி உள்ளி வந்தனென்". - திருமுருகாற்றுப்படை 278.9 என்பது திருமுருகாற்றுப்படையாகும், அறிதல் அறிவின் தொழில், ஆனால், உன்னை அளந்து அறிய முடியாது என்று முருகாற்றுப்படை கூறும்பொழுது இறைவனை அறிந்து கொண்டு ஆய்ந்து அறியமுடியாது என்பதைத் திட்டமாகக் கிறிஸ்துவுக்கு முன்னரே இத்தமிழர் அறிந்து கூறினர். 7ஆம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/72
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை