மக்களும் இராமனும்ேே - 55 நூற்றாண்டின் இறுதியில் திருஅவதாரம் செய்த ஆழ்வார்களுள் அங்கி எனப்படும் நம்மாழ்வார் இதே கருத்தை வலியுறுத்திச் செல்வதையும் காணலாம். "அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என்அடி அடைவர்கள்" (நாலா - 2903) "ஆர்க்கும் அறிவு - அரிதே' (நாலா - 3394) "அறிவு - அரிய பிரானை" நாலா - 3395) என்று கூறும் பகுதிகள் இறைவனை அறிவின்துணைகொண்டு அடைய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். அறிவினால் அறியவொண்ணாப் பிரானை அன்பு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும் என்ற கருத்துக்கு, "அன்பே தகளியா” (2182) என்ற பூதத்தாழ்வார் பாடலும், "இரும்புஅனற்று உண்டநீர்போல், எம்பெருமானுக்கு என் - தன் அரும்பெறல் அன்பு புக்கிட்டு, அடிமைபூண்டு உய்ந்து போனேன்" நாலா - 2036) என்ற திருமங்கை ஆழ்வார் பாடலும் ஆதாரமாகும் எடுத்துக்காட்டுகளாகும். இப்பழந்தமிழர் கொள்கையை அடியொற்றியே இராமன் என்ற பரம் பொருளை அறிவால் காண முற்பட்ட கூட்டத்தாரையும், அன்பின் துணைகொண்டு உருகிக் கண்ட மக்கள் கூட்டத்தையும் தனித்தனியே பாடுகின்றான் கவிஞன். நாடக அங்கதம் பெரும்பாலும் நாடகங்களிலும், சிறுபான்மை காப்பியங்களிலும் அந்தந்த ஆசிரியர்கள் கையாளும் பல உத்திகளில் நாடக அங்கதம் (dramatic irony) என்ற ஒரு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை