பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ேே 57 மகிழ்கின்றனர். இராகவன் காடு செல்வதால் தேவர்கள், முனிவர்கள் இதுவரையில் படுகின்ற துயரமும், அதற்குக் காரணமான பாவமும் அழியப் போகின்றன என்றும், இதுவரை மூன்றுலகங்கட்கும் அதிபதி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட இராவணன ஆதிக்கத்தின்கீழ் உள்ள பூவலயம், இராம ராச்சியத்தில் அனைவருக்கும் பொது வாக்கப்படும் என்றும், தேவர்கள் பகையாகிய இராவணனை இவ் வள்ளல் அழிப்பான் என்றும், தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதைப் பின்வரும் பாடலில் உணர்த்துகிறான் கம்பன்: "பாவமும் அருந்துயரும் வேர்பறியும் என்பார்; 'பூவலயம் இன்று தனிஅன்று பொது என்பார்; தேவர் பகைஉள்ளன இவ்வள்ளல் தெறும் என்பார்; ty (கம்பன் - 1592) மக்கள் குரலே மகேசன் குரல் என்ற முதுமொழிக்கு ஏற்ற பாடலாகும் இது. மகிழ்ச்சியின் மறுபுறம் சுமந்திரன் தேரோட்ட, கைகேயியின் அரண்மனைக்கு இராமன் செல்லும் வழியில் அவனைக் கண்ட மக்கள் அடைந்த மகிழ்ச்சியையும், பேசிய பேச்சுகளையும் கவிச்சக்கரவர்த்தி கூறிய முறையில் விரிவாகக் கண்டோம். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்த அதே மக்கள் சில நாழிகை நேரத்திற்குள் துயரக் கடலுள் மூழ்குவதை அடுத்த படலமாகிய நகர் நீங்கு படலம் விரிவாகப் பேசுகிறது. சிற்றன்னை இட்ட ஆணையின் வண்ணம் இராமன் காடு செல்லப் போகின்றான் என்று கேள்வியுற்ற மக்கள் படும் அவலத்தைப் பல பாடல்களில் பாடுகிறான் கவிஞன். மகிழ்ச்சியும்,துயரமும் மாறிமாறி வருவது மனித வாழ்க்கைக்கு இயல்பானது தான் என்று பெரியோர்கள் எவ்வளவு கூறினும்,