மக்களும் இராமனும்38 - 59 என்ற இவ்விரு பாடல்களிலும் கிளி, மைனா என்பன போன்ற பறவை இனங்களும், இவற்றிற்குப் பகையாகிய பூனைகளும் அழுதன. பெருந்துயரத்தால் இவை தம் பகைமையை மறந்து அழுதன என்றான். மானிட சாதி ஆயினும் விவரமறியா குழந்தைகளையும் இவற்றோடு சேர்த்து விட்டான், கவிஞன். ஐயறிவுடையவை அழுதன என்று சொன்னால் ஆறறிவுடைய பெரியோரைப் பற்றிச் சொல்ல வேண்டா. இதனை அடுத்த இயல்பாகவே அமைதிக்குணம் படைத்த பசுக்களும், கன்றுகளும் அழுதன என்றான். அதைவிட ஒருபடி மேலே சென்று, அசையாப்பொருள்களான அன்றலார்ந்த பூவும், பூந்தோட்டங்களில் உள்ள மலர்களும் அழுதன் என்றான் கவிஞன். மக்களோடு பழகும் கிளி, ம்ைனா பூனை என்பவை அம்மக்கள் துயரத்தில் பங்கு கொண்டதாகச் சொன்னால் ஒரளவும் வியப்பில்லை என்று கருதுவார்க்கு விடை கூறுபவன் போலப் பாடலின் மூன்றாவது அடியில் களிறுகளும், குதிரைகளும் அழுதன என்று கூறுவது சிந்திக்கற்பாலது. யாரோ ஒரு மன்னன் மகன் காடு செல்கிறான் என்பதற்காக இயற்கை அழுதது, புள்ளினங்களும் மாடும் அழுதன் என்று கூறுவது நம்ப முடியாத உயர்வு நவிற்சி அணி என்று கூறுவது இந்த இடத்திற்குப் பொருந்தாக் கூற்றேயாகும். இராமன் என்பவன் தசரதன் மைந்தன் என்றுதான் மக்கள் பலரும் நினைந்துள்ளனர். மிகவும் நல்லவன் அறத்தின் முர்த்தி, மக்கள் நலனே கருதுபவன் என்பதற்காக மக்கள் அவன் பிரிவிற்கு வருந்தியிருக்கலாம். ஆனால், அம்மக்களுள் மிகச் சிலரும், இயற்கையும், விலங்குகளும் இராமன் யார் என்பதைத் தமக்கே உரிய உள்ளுணர்வால் அறிந்திருந்தன போலும்! கிள்ள்ை முதல் மலர் வரை உள்ள இவை அனைத்தும் உயிர் உள்ள பொருள்களே ஆகும். அந்த உயிருக்குள்ளே ஒளித்து நிற்கும் அந்தப் பரம்பொருள் - கண், அறிவு, மனம், சொல் ஆகிய அனைத்திற்கும் எட்டாத அந்தப்பரம்பொருள்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை