பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ேே. இராமன் - பன்முக நோக்கில் - உயிர்க்குயிராய் உறைவதை மனிதர்கள்தாம் அறிவதில்லையே தவிர இயற்கை நன்கறியும். எனவே, இங்குக் கூறப்பெற்ற கிள்ளை, பூனை, யானை, குதிரை போன்றவை மானுட உருத்தாங்கிய தசரதகுமாரன் அரசகுமாரன் என்று அறியமாட்டா. அவன் பட்டத்தைத்துறந்து காடு செல்கிறான் என்பதை அறியமாட்டா. என்றாலும், தம் உயிர்க்குயிரான பரம்பொருள் தம்மிடையேயிருந்து எங்கோ செல்வது போன்ற உணர்வு மிகுதியால் அழுதன என்கிறான் கவிஞன். இக்கருத்தைக் கம்பனுக்கு உதவியவர் பெரியாழ்வார் ஆவார். அவர் பாடலில் கோவிந்தன் குழலூதியபோது இயற்கைப் பொருள்கள் தம் செவிசாய்த்துத் தம் இயல்பை மறந்தன என்று பின்வரும் பாடல்களில் கூறுகிறார்: - ...கோவிந்தன் குழல் கொடுஊதினபோது, பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து படுகாடுகிடப்ப கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே - நாலா. 282 "...மருண்டுமான்கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர இரண்டு பாடுங்துலுங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே" - நாலா 283 "மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும் மலர்கள் விழும்வளர் கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும் திருமால் நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே” - நாலா 284