மக்களும் இராமனும்ேே 61 ஆயர்பாடியில் உள்ள மக்கள் கண்ணன் யார் என்பதை அறிந்து கொள்ளாவிடினும் அவன் மேய்த்த ஆநிரைகளும் கன்றுகளும் ஏனைய விலங்குகளும் நன்கறிந்திருந்தன என்பதையும் அவன் குழு லினின்று எழுந்த ஒலி அவ்விலங்குகளின் உயிர்க்குள் இருக்கும் பரம்பொருள் எழுப்பும் ஒலி என்று உணர்ந்த காரணத்தால்தான் அவன் குழலூதிய போது அவை தம் உணவை மறந்து நிலைகுத்தி நின்றுவிட்டன என்கிறார் ஆழ்வார். இக்கருத்தைக் கூறவந்த கம்பநாடன் இராமன் பரம்பொருள் என்பதை நிறுவ இந்நிகழ்ச்சியைக் கையாள்கிறான். உள்ளுணர்வின் வெளிப்பாடு ஆழ்ந்த உணர்ச்சியில் ஈடுபடும்போது மக்களின் பகுத்தறியும் அறிவு தொழிற்படுவதில்லை. அதற்குப் பதிலாக ஆழ்மனத்தின் உள்ளே இருக்கும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது. இந்த உள்ளுணர்வு என்பது காலம், இடம் என்பவற்றைக் கடந்து முக்காலத்தையும் உணர வல்லதாகும். பெரிய ஞானிகட்கு எந்நேரமும் இவ் உள்ளுணர்வு தொழிற்படும் என்பர். சாதாரண மக்களுக்குத் தம்மை மறந்த ஆழ்மன நிலையில் இந்த உள்ளுணர்வு தொழிற்படும் என்பது மனவியலார் கண்ட உண்மை. இராமன் பிரிவில் தம்மை மறந்து பெருந்துயரத்தில் மூழ்கிய அயோத்தி மக்களின் உள்ளுணர்வு இப்பொழுது பேசத்தொடங்குகிறது. அதனையே கவிஞன் இப்பாடலில் குறிக்கிறான்: "ஆளான் பரதன் அரசு' என்பார் ஐயன், இனி மீளான்; நமக்கு விதி கொடிதே காண் என்பார்; கோள் ஆகிவந்தவா, கொற்றமுடிதான் என்பார் 'மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்? என்பார். - கம்பன் 1707 என்ற இப்பாடலில் இதுவரை இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தசரதன், கைகேயி, வசிட்டன், இராமன், இலக்குவன், கோசலை, சுமித்திரை, சுமிந்திரன் ஆகிய யாருடைய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை